ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டைகள் பெற்ற வழக்கு தொடர்பாக 2 தனியார் மருத்துவமனைகளுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஈரோட்டைச் சோ்ந்த 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கருமுட்டை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன்படி, ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி வலசு பகுதியில் கணவனை பிரிந்து 16 வயது மகளுடன் இருந்த சுமையா, சையது அலி என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
வளர்ப்பு தந்தையான சையது அலி சிறுமியை தொடர் பாலியல் வன்கொடுமை செய்ததும், 8 முறைக்கு மேல் சிறுமியிடம் இருந்து கருமுட்டையை பெற்று விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. சிறுமிக்கு கருமுட்டை உருவான பிறகு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருமுட்டை கொடுத்து ஒவ்வொரு முறையும் ரூ.20,000 பணம் வாங்கி வந்துள்ளனா் .
சிறுமியின் வயதை 20 ஆக கூடுதலாக காட்டுவதற்காக போலி ஆதார் அட்டை தயார் செய்துள்ளனர். இடைத் தரகராக மாலதி என்பவர் செயல்பட்டு வந்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை சையது அலி, பெண் இடைத்தரகர் மாலதி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிக்க: பெண்ணிடம் பட்டப்பகலில் 15 சவரன் நகை பறிப்பு.. சிசிடிவியில் சிக்கிய கொள்ளையர்
இந்த விவகாரத்தில் 2 தனியார் மருத்துவமனைகள் காவல்துறை கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் ஈரோடு சுதா மருத்துவமனை மற்றும் பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவமனைகளுக்கு காவல்துறையின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Minor girl