ஈரோட்டில் மத்திய அரசு அதிகாரி என பொய் சொல்லி திருமணம் செய்த கணவர் மனைவிக்கு உண்மை தெரிந்ததால் படுக்கை அறை காட்சிகளை வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மொடச்சூரை சேர்ந்த லிவ்விங்ஸ்டன் ஜெயபால் (30) என்பவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் பொம்மப்பட்டியை சேர்ந்த அபிதா (23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
லிவ்விங்ஸ்டன் ஜெயபால் திருமணத்தின் போது தான் மத்திய அரசின் உனவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்று கூறியுள்ளார். இதனை நம்பிய அபிதாவின் குடும்பத்தார் லிவ்விங்ஸ்டன்னுக்கு ரூ.1 லட்சமும், 20 பவுன் நகையும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில் ஒரு நாள் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்ற கதையாக லிவ்விங்ஸ்டன் மத்திய அரசு அதிகாரி இல்லை என்பது அபிதாவுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அபிதா கணவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு லிவிங்க்ஸ்டன் நாம் இருவரும் ஒன்றாக இருந்த படுக்கை அறை காட்சிகளை வீடியோ கால் மூலம் பதிவு செய்துள்ளேன் என்றும், ஏற்கனவே அதனை இருவர் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், என்னிடம் வேறு ஏதாவது கேள்வி கேட்டால் அந்த காட்சிகளை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அபிதா, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்து காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் லிவ்விங்ஸ்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Erode, Local News, Sexual abuse