ஹோம் /நியூஸ் /Erode /

சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்ட சம்பவம்.. கேரளா, ஆந்திராவில் விசாரணை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு

சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்ட சம்பவம்.. கேரளா, ஆந்திராவில் விசாரணை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு

கருமுட்டை விற்பனை

கருமுட்டை விற்பனை

ஐ.சி.எம்.ஆர் விதிகள் படி ஒருவரிடமிருந்து ஒரு முறை மட்டுமே வாழ்நாளில் கருமுட்டை பெற முடியும். அதுவும் ஏழு முட்டைகள் மட்டுமே. ஆனால், இந்த விதிகள் சிறுமியிடம் முற்றிலும் மீறப்பட்டுள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஈரோட்டை சேர்ந்த சிறுமியிடம் 3 ஆண்டுகளாக கருமுட்டை எடுக்கப்பட்டது தொடர்பாக, கேரளா மற்றும் ஆந்திராவிற்கும் சென்று விசாரணை நடத்த, தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

  சூரம்பட்டி வலசு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் வயதை ஆதார் கார்டில் போலியாக திருத்தி, சிறுமியின் கருமுட்டையை சட்டவிரோதமாக விற்றதாக, பெறப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதுதொடர்பாக, சிறுமியின் தாய் மற்றும் ஆதார் கார்டில் வயதை திருத்தி கொடுத்த ஜான் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

  இந்நிலையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையிலான 6 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த மூன்று ஆண்டுகளாக அதாவது தனது 14வது வயதில் இருந்தே கருமுட்டை கொடுத்து வந்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

  ஐ.சி.எம்.ஆர் விதிகள் படி ஒருவரிடமிருந்து ஒரு முறை மட்டுமே வாழ்நாளில் கருமுட்டை பெற முடியும். அதுவும் ஏழு முட்டைகள் மட்டுமே. ஆனால், இந்த விதிகள் சிறுமியிடம் முற்றிலும் மீறப்பட்டுள்ளது.

  இதையும் படிக்க: தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  இதனிடையே, சிறுமியின் கருமுட்டையை தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கும், ஆந்திராவில் ஒரு மருத்துவமனைக்கும் விற்றது மருத்துவ குழுவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த குழு, கேரளா மற்றும் ஆந்திரா சென்று விசாரணை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

  இந்நிலையில், சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பாக, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறையின் மருத்துவ விசாரணை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கருத்தரிப்பு மையம் எனும் பெயரில் செயல்படும் அந்த மருத்துவமனையில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா, குறிப்பிட்ட சிறுமியின் கருமுட்டை இந்த மருத்துவமனை மூலம் விற்கப்பட்டதா எனும் நோக்கில் இந்த ஆய்வு நடைபெறுவதாக  கூறப்படுகிறது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Child Abuse, Erode