முகப்பு /செய்தி /ஈரோடு / ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு: எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு வாக்குகள்?

ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு: எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு வாக்குகள்?

ஈவிகேஎஸ் வெற்றி

ஈவிகேஎஸ் வெற்றி

அதிமுக வேட்பாளர் தென்னரசு, 41,357 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்கவைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

பரபரப்பாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 1,10,039 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.

கடந்த 27ம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 15 சுற்றுகள் நடைபெற்றன. ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்த ஈவிகேஎஸ், அதிமுக வேட்பாளரை விட 66,575 வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றி பெற்றார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு, 41,357 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்கவைத்தார். கட்சிகள் பெற்ற வாக்கு எண்ணிக்கை பின்வருமாறு:

காங்கிரஸ் - 1,10,039; அதிமுக - 43,981; நாம் தமிழர் - 10,804; தேமுதிக - 1,114, இதில் நாம் தமிழர், தேமுதிக கட்சிகள் டெபாசிட் இழந்தன.

First published:

Tags: ADMK, Congress, Erode Bypoll, Erode cooperative society, EVKS Elangovan, Naam Tamilar katchi