முகப்பு /செய்தி /ஈரோடு / ஈரோடு இடைத்தேர்தல் வாக்குவாதம்.. “ஊடகத்தினரை தடுப்பது நோக்கமல்ல..”- ஆட்சியர் விளக்கம்..!

ஈரோடு இடைத்தேர்தல் வாக்குவாதம்.. “ஊடகத்தினரை தடுப்பது நோக்கமல்ல..”- ஆட்சியர் விளக்கம்..!

கிருஷ்ணனுன்னி பேட்டி

கிருஷ்ணனுன்னி பேட்டி

வாக்கு எண்ணிக்கை நிறுத்த முடியாது. முதல் முடிவை அறிவித்த பின் மூன்றாவது சுற்றை துவங்க வேண்டும். அதுதான் விதிமுறை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசுவும் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 2 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

இதனிடையே தேர்தல் முடிவுகள் தாமதமாக வருவதாக கூறி தேர்தல் அலுவலர்களிடம் பத்திரிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பத்திரிகையாளர்களுடன் மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலருமான கிருஷணனுண்ணி பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அப்டேட் உடனுக்குடன் 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படவில்லை. முதல் சுற்று அறிவித்தவுடன் மூனறாவது சுற்று துவங்கும். மைக்ரோ அப்சர்வர் முன்னிலையில் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றது. வழக்கமாக எப்போதும் முதல் சுற்றுக்கு நேரம் எடுக்கும். அப்சர்வர் கையெழுத்து பெற்று அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்படும். அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை வேகமாக இருக்கும். தேர்தல்முடிவு அறிவிப்பது சரியாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார் .

ஊடகத் தொடர்புக்கு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. ஊடகத்தினரை தடுத்து நிறுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. தேர்தல் ஆணைய விதிமுறைகள் படி அனைத்து அறிவிப்புகளும் இருக்கும். வாக்கு எண்ணிக்கை நிறுத்த முடியாது. முதல் முடிவை அறிவித்த பின் மூன்றாவது சுற்றை துவங்க வேண்டும். அதுதான் விதிமுறை. இதுதொடர்பாக வெளியாகும் தகவல்கள் அதிகார்வபூர்வமற்றவை. இங்கு இருந்து நாங்கள் கொடுப்பது மட்டும் அதிகார்வ பூர்வமான தகவல். தபால் வாக்கு இருப்பதால் சற்று தாமதமாகின்றது” என்று கூறினார்.

First published:

Tags: Erode Bypoll, EVKS Elangovan