முகப்பு /செய்தி /ஈரோடு / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு!

ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவு

மாலை 5 மணி வரை 71 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

விறுவிறுப்பாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி வரை 71 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடந்தது. கடந்த 10-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களமிறங்கினர். காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக கே.எஸ். தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா , தேமுதிக வேட்பாளராக ஆனந்த் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த தொகுதியில் 1,11,025 ஆண்களும், 1,16,497 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 2 ,27,547 வாக்காளர்கள் உள்ளனர். இதையொட்டி 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கடைசி நேரத்தில் வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வரிசையில் நின்று வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.  விறுவிறுப்பாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி வரை 71 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 66 சதவீத வாக்கு பதிவான நிலையில் இம்முறை கூடுதலாக வாக்குப்பதிவாகியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

First published:

Tags: Erode Bypoll, Erode East Constituency