ஹோம் /நியூஸ் /ஈரோடு /

“ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வீடுவீடாக பரப்புரை செய்வேன்..” சீட்டு கேட்டு கண் கலங்கிய காங். நிர்வாகி பேச்சு

“ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வீடுவீடாக பரப்புரை செய்வேன்..” சீட்டு கேட்டு கண் கலங்கிய காங். நிர்வாகி பேச்சு

ஈவிகேஎஸ் இளங்கோவன், மக்கள் ராஜன்

ஈவிகேஎஸ் இளங்கோவன், மக்கள் ராஜன்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மாவட்டத் தலைவர் ஒருவரின் ஆதரவு இளங்கோவனுக்கு கிடைக்கவில்லை என்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு கண்கலங்கிய, மக்கள் ஜி.ராஜன், தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பரப்புரை செய்வேன் என கூறியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் பங்கேற்றப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி.ராஜன், தனக்கு சீட் வேண்டும் என கண்கலங்கினார்.

எனினும், ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக கட்சி மேலிடம் அறிவித்தது. இதை குறிப்பிட்டு விமர்சித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மாவட்டத் தலைவர் ஒருவரின் ஆதரவு இளங்கோவனுக்கு கிடைக்கவில்லை என்றார். இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.ராஜன், தான் ஞாயிற்றுக்கிழமை அழுதது பற்றி விளக்குகையில் தாய் தந்தையை நினைத்து கண்கலங்கியதாக தெரிவித்தார். ஈவிகேஎஸ் இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வோம் என்றும் ராஜன் கூறினார்.

First published:

Tags: Erode Bypoll, Erode East Constituency, EVKS Elangovan