முகப்பு /செய்தி /ஈரோடு / “ஈரோட்டில் பணநாயகம் வென்றது...” வாக்கு மையத்தில் இருந்து விறுவிறுவென வெளியேறிய அதிமுக வேட்பாளர்..!

“ஈரோட்டில் பணநாயகம் வென்றது...” வாக்கு மையத்தில் இருந்து விறுவிறுவென வெளியேறிய அதிமுக வேட்பாளர்..!

வெளியேறிய அதிமுக வேட்பாளர்

வெளியேறிய அதிமுக வேட்பாளர்

அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் இருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசுவும் களத்தில் உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகாவும், தேமுதிக சார்பில் ஆனந்தனும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக இருந்தனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதையும் படிங்க; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அப்டேட் உடனுக்குடன் 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். மூன்று சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் 32,506 வாக்குகளும், அதிமுக 11,219 வாக்குகளும் பெற்றிருந்தன. சுமார் 21,287 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் இருந்தார்.

அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து விறுவிறுவென வெளியே வந்த அதிமுக வேட்பாளர் தென்னரசு காரில் ஏறி புறப்பட்டார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர். அதற்கு, “ஜனநாயகம் தோற்றுவிட்டது, பணநாயகம் வென்றது” எனக் கூறிவிட்டு மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அங்கிருந்து கிளம்பினார்.

First published:

Tags: Erode Bypoll, EVKS Elangovan