முகப்பு /செய்தி /ஈரோடு / ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : 35 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : 35 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனை

வாகன சோதனையில் அதிகாரிகள்

வாகன சோதனையில் அதிகாரிகள்

Erode East By Election | வாகனங்களில் கொண்டு வரப்படும் பொருட்கள், பணம் மற்றும் அதற்கான ஆவணங்களை சரிபார்த்த பின்னரே வாகனங்கள் அனுமதி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து, காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அங்கு, தேர்தல் நடத்தை விதிகளை முறையாக கடைபிடிக்கும் வகையில், தேர்தல் நடத்தும் அலுவலரால் பறக்கும் படை, கண்காணிப்பு குழு மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, பரிசுப் பொருட்கள் விநியோகம் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல் துறையின் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 35 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சோதனைச் சாவடிக்கும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக, பணியில் மொத்தம் 250 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சோதனையின் போது, வாகனங்களில் கொண்டு வரப்படும் பொருட்கள், பணம் மற்றும் அதற்கான ஆவணங்களை சரிபார்த்த பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப் படுகின்றன. மேலும், அனுமதி இன்றி வாகனங்களில் கட்டப்பட்ட கட்சிக் கொடிகளும் அகற்றப்படுகின்றன.

First published:

Tags: Erode, Local News