முகப்பு /செய்தி /ஈரோடு / Exclusive | "அருந்ததியினர் பற்றிய சர்ச்சைக்கு 24 மணி நேரத்தில் சீமான் விளக்கமளிப்பார்... " - வேட்பாளர் மேனகா

Exclusive | "அருந்ததியினர் பற்றிய சர்ச்சைக்கு 24 மணி நேரத்தில் சீமான் விளக்கமளிப்பார்... " - வேட்பாளர் மேனகா

தேர்தல் பிரச்சாரத்தில் சீமானுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா

தேர்தல் பிரச்சாரத்தில் சீமானுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா

Erode East By Election | அருந்ததி இன மக்கள் குறித்து பேசியதற்கு 24 மணி நேரத்தில் சீமான் விளக்கம் அளிப்பார் என மேனகா பேச்சு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

தேர்தல் ஆணையம் ஆளும் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் அருந்ததி இன மக்கள் குறித்து பேசியதற்கு சீமான் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிப்பார் எனவும் ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் மேனகா தெரிவித்துள்ளார்.

கடந்த 13ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரையின் போது அருந்ததியின மக்களை அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமூக நீதி மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சாதிகளுக்கு இடையே பொய் வரலாறுகளை கூறி வரும் நாம் தமிழர் கட்சி மீது தேர்தல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீமான் பேச்சு தொடர்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தவறும்பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வேட்பாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, அருந்ததியர் மக்களைப் பற்றி சீமான் எதுவும் தவறாக பேசவில்லை என்றும் வந்தேறிகள் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை வரலாற்றைதான் அவர் கூறினார் என்றார்.

சில பேர் அதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்றும் சமூக விரோதிகள் மற்றும் ஆளுங்கட்சியினர். இது போன்ற தவறான கருத்துக்களை பரப்பி வருவதாக குற்றச்சாட்டியுள்ள மேனாக, எங்களுக்கு வழக்கு ஒன்றும் புதிதல்ல வழக்கு போடவில்லை என்றால் தான் ஆச்சரியமாக இருக்கும்  என தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என குற்றச்சாட்டிய மேனகா, அருந்ததி இன மக்கள் குறித்து பேசியதற்கு 24 மணி நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டிப்பாக பதில் அளிப்பார் என்றார். மேலும் அருந்ததிய மக்கள் எப்போதும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பார்கள் ஆதரவு தருவார்கள் என்றும் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் அருந்ததிய மக்கள் எங்களுக்கு முழு ஆதரவை அளிப்பதாக கூறினார். ஆளுங்கட்சியினர் நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என தோல்வி பயத்தால் இது போன்ற சதி வேலைகளில் ஈடுபட்டு வருவதாக நாம் தமிழ் கட்சி வேட்பாளர் மேனகா குற்றச்சாட்டியுள்ளார்.

First published:

Tags: Erode East Constituency, Naam Tamilar katchi, Seeman