முகப்பு /செய்தி /ஈரோடு / வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

வேட்பு மனு தாக்கல் செய்த  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா

வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா

Erode East By-Election NTK Candidate | மாநகராட்சி அலுவலகத்திற்கு வேட்பாளர் மேனகா நாம் தமிழர் கட்சியினருடன் ஊர்வலமாக வந்த நிலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், வேட்புமனு தாக்கல் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கியது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக, மாநகராட்சி அலுவலகத்திற்கு வேட்பாளர் மேனகா நாம் தமிழர் கட்சியினருடன் ஊர்வலமாக வந்த நிலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வேட்பாளருடன் நான்கு பேர் மட்டும் செல்ல அனுமதி வழங்கியதை அடுத்து, வேட்பாளர் மேனகா, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை வழங்கினார்.

பின்னர் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், மஞ்சள் மாநகரமான ஈரோடு சாயக்கழிவுகளால் கேன்சர் மாநகரமாக மாறி வருவதாக கூறினார்.

First published:

Tags: Erode Bypoll, Erode East Constituency, Seeman