முகப்பு /செய்தி /ஈரோடு / ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

Erode East By-Election | வேட்பாளர்களின் சின்னம் மற்றும் அவர்களின் சொத்து மதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன், தென்னரசு உள்பட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். பரிசீலனைக்கு பிறகு 83 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில், 6 பேர் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். இதையடுத்து, வேட்புமனு ஏற்கப்பட்ட 77 பேரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னமும், தென்னரசுக்கு இரட்டை இலை சின்னமும், ஆனந்துக்கு முரசு சின்னமும் ஒதுக்கப்பட்டது. கரும்பு விவசாயி சின்னம் வேறு யாருக்கும் வேண்டுமா என அதிகாரிகள் கேட்டதால் நாம்தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுக்கே அந்த சின்னம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரம் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணிக்கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு 3 கோடியே 50 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மனைவி பெயரில் 7 கோடியே 16 லட்சத்துக்கும் குடும்பம் சார்பில் 8 கோடியே 12 லட்சம் ரூபாய்க்கும் சொத்து உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பெயரில் ஒரு கோடியே 29 லட்சம் ரூபாயும் மனைவி பெயரில் ஒரு கோடியே 71 லட்சம் ரூபாயும் குடும்பம் சார்பில் 47 லட்சத்த 55 ஆயிரம் ரூபாயும் கடன் இருப்பதாக வேட்பு மனுவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு தாக்கல் செய்த வேட்புமனுவில், தனக்கு 2 கோடியே 27 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாகவும் தனது மனைவி பெயரில் ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். தன் பெயரிலோ தனது மனைவி பெயரிலோ கடன் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேமுதிக வேட்பாளர் ஆனந்த், தனக்கு அசையும் சொத்துக்கள் 4.74 லட்சம் ரூபாய் மதிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அசையா சொத்தாக 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 நிலங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வங்கியில் தனது பெயரில் 2 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகாவின் சொத்து மதிப்பு 9 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவரது கணவரின் பெயரில் 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் சொத்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தனது பெயரில் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும் தனது கணவர் பெயரில் 3 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயும் கடன் உள்ளதாக தனது வேட்புமனுவில் மேனகா தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Erode East Constituency