முகப்பு /செய்தி /ஈரோடு / ஈரோட்டில் இரட்டை கொலை வழக்கில் தாய்மாமன் உள்ளிட்ட இருவர் கைது

ஈரோட்டில் இரட்டை கொலை வழக்கில் தாய்மாமன் உள்ளிட்ட இருவர் கைது

கைது செய்யப்பட்ட 2 பேர்

கைது செய்யப்பட்ட 2 பேர்

Erode Double Murder | இளைஞர்களின் தாய் மாமன் ஆறுமுகசாமி மற்றும் உறவினர் கவின் ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோட்டில் இளைஞர்கள் இரட்டை கொலையில் தாய்மாமன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு முனிசிபல் காலனியில் நேற்று முன்தினம் இரவு நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி பொருளாளர் கார்த்திக் மற்றும் அவருடைய சகோதரர் கௌதம் ஆகிய இருவரும் கத்தியால் குத்தி படுகொலை  செய்யப்பட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார், இளைஞர்களின் தாய் மாமன் ஆறுமுகசாமி மற்றும் உறவினர் கவின் ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் குடும்ப சொத்து பிரச்சனை காரணமாக இளைஞர்கள் இருவரையும் தாய் மாமனே குத்தி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

ஆறுமுகசாமி பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றார்.அவரது உறவினரான கவின் ஈரோட்டில் உள்ள கார் ஷோரூமில் விற்பனை பிரதிநிதியாக உள்ளார். நேற்று முன்தினம் ஆறுமுகசாமி, கவின் இருவரும் முனிசிபல் காலனியில் உள்ள கார்த்திக் வீட்டிற்கு சென்று அவர்களுடன் வாக்குவாதம் செய்த போது தகராறு ஏற்பட்டதில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சகோதரர்கள் இருவரையும் குத்தி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

செய்தியாளர்: மா.பாபு    

First published:

Tags: Crime News, Erode, Local News