கொரனோ தடுப்பு மருந்து என கூறி பூச்சிக்கொல்லி மாத்திரை கொடுத்து 4 பேரை கொலை செய்த வழக்கில்,இரண்டு பேருக்கு கடுங்காவல் தண்டனை விதித்து ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னிமலை அடுத்த கே.ஜி வலசு பகுதியை சேர்ந்த விவசாயி கருப்பணன் வீட்டிற்கு கடந்த 26.6.2021 அன்று வந்த இளைஞர் ஒருவர் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனக்கூறி, அதற்கு முன்பாக சில மாத்திரைகளை கொடுத்துள்ளார்.
இதனை சாப்பிட்ட கருப்பணன், அவரது மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும் தோட்ட வேலைக்கு வந்த குப்பம்மாள் ஆகிய நான்கு பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடத்திய சென்னிமலை போலீசார், 14 லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்த முடியாமல் பூச்சி கொல்லி மாத்திரை கொடுத்து 4 பேரையும் கொலை செய்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அம்மாபாளையத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் மற்றும் அவருக்கு உதவிய கல்லூரி மாணவன் சபரிஸ் என்ற போத்திஸ்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்து இன்று தீர்பளித்த ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், கல்யாணசுந்தரத்திற்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனையும், சபரிக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் இருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
செய்தியாளர்: மா.பாபு, ஈரோடு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Erode, Judgement, Murder case