முகப்பு /செய்தி /ஈரோடு / அரசு மருத்துவமனையில் ஒரு ரூபாய்க்கு 3 வேளை உணவு.. ஈரோடு தம்பதியை புகழந்த முதல்வர் ஸ்டாலின்

அரசு மருத்துவமனையில் ஒரு ரூபாய்க்கு 3 வேளை உணவு.. ஈரோடு தம்பதியை புகழந்த முதல்வர் ஸ்டாலின்

வெங்கட்ராமன் - ராஜலட்சுமி தம்பதி

வெங்கட்ராமன் - ராஜலட்சுமி தம்பதி

இது குறித்த செய்தியை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன் - ராஜலட்சுமி இணையரின் ஈரமனது தன் இதயத்தை நனைத்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் இதுவே தமிழறம் எனவும் புகழாரம் சூடியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோட்டில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுடன் தங்கி இருப்பவர்களுக்கு, 15 ஆண்டுகளாக, ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கி, சேவையாற்றி வரும் தம்பதியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு அங்கேயே உணவு வழங்கப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு உதவியாக வந்து தங்குபவர்கள் வெளியில் உணவுக்காக தினமும் குறைந்தபட்சம் ரூ.150 செலவிட நேரிடுகிறது. ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உணவகம் நடத்தி வரும் வெங்கட்ராமன் என்பவர், இத்தகையோரின் சிரமங்களை கவனித்து ஒரு ரூபாய் உணவு வழங்க வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

காலை மாலை நேரங்களில் சிற்றுண்டியும், மதியம் முழு சாப்பாடும் ஒரு ரூபாய்க்கு வழங்க முடிவு செய்து, 15 ஆண்டுகளாக இந்த சேவையை தொடர்ந்து வருகின்ளனர். இவ்வாறு நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 நபர்களுக்கு உணவளித்து வருகிறார் வெங்கட்ராமன். இதே போல் மாற்றுத்திறனாளிகளுக்கு 20% சலுகை விலையில் உணவு வழங்குகிறார். இவரது சேவைக்கு பக்கபலமாக இருக்கிறார் அவரது மனைவி ராஜலட்சுமி.

அரசு மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் விபரங்களுடன் முதல் முறை பதிவு செய்யும் நோயாளிகளுக்கு தட்டு, டம்ளர் ஆகியவற்றை வழங்குகின்றனர்.

இதையும் வாசிக்க: என்னை அடித்தால் இருமடங்கு திருப்பி அடிப்பேன்... அண்ணாமலை பேட்டி

கடைக்கான வாடகை, ஆட்கள் சம்பள உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவை இவர்களுக்கு பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தி வந்தாலும். அவ்வப்போது முகம் அறியாத சில நபர்கள் வழங்கும்  ஆதரவினால் 15 ஆண்டுளாக இடைவிடாது இந்த சேவையை தொடர முடிவதாக கூறுகின்றனர் இந்த தம்பதியினர்.

இது குறித்த செய்தியை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன் - ராஜலட்சுமி இணையரின் ஈரமனது தன் இதயத்தை நனைத்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் இதுவே தமிழறம் எனவும் புகழாரம் சூடியுள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, Erode, Govt hospital