தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 22 மாதங்களாக கோமா நிலையில் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து இடையன்காட்டு வலசு பகுதியில், அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், நெசவாளர்களுக்கு 80 சதவீதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் “திமுக 22 மாத ஆட்சியில் தினமும் புது விதமான பிரச்சனைகளைதான் கொடுத்துள்ளனர். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எதுவும் செய்யவில்லை. 33 அமைச்சர்களும் மக்களை எப்படி அடைக்கலாம், எப்படி பொய் வாக்குறுதி கொடுக்கலாம் என யோசிக்கின்றனர்.
திமுக 22 மாத ஆட்சியில் சம்பாதித்தை மக்களுக்கு கொடுத்தால் வெற்றி பெறலாம் என கற்பனையுடன் வளம் வருகின்றனர். தற்போது விசைத்தறியாளர்களுக்கு 1000 யூனிட் இலவசமாக தரப்படும் என சொல்வது வெடகக்கோடானது.
வாக்காளர் தேர்தலின்போது வைக்கும் மை காயும் முன்பே
இளங்கோவன் சென்னைக்கு சென்று இருப்பார். திமுகவின் கூட்டணி தர்மம் சந்தி சிரிக்கிறது. இளங்கோவன் ஏழை மக்களுக்கானவர் அல்ல. தென்னரசு வெற்றி பெறும்போது திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற வைக்க முடியும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். தனது கட்சியில் உள்ள பெண்களை இளங்கோவன் எப்படி நடத்துவார் என்பதை விஜயதாரணியிடம் கேளுங்கள். பல மாதங்களாகியும் குரூப் 4 தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடவில்லை. வேலைவாய்ப்பு குறித்த எந்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.
30 ஆண்டுகாலமாக தலை நிமிர்ந்த இருந்த காவல்துறை தற்போது திமுக ஆட்சியில் கைகட்டப்பட்டுள்ளது. விடியல் தருவோம் என தெரிவித்து ஆட்சிக்கு வந்த திமுக தற்போது டாஸ்மாக் மூலம் பெண்களின் தாலியை கழற்றுகிறது.
திருமங்கலம் பார்முலா , அரவக்குறிச்சி பார்முலா போல் ஈரோடு பார்முலா என கெட்ட பெயர் வாங்கிவிடாதீர்கள்” என கூறி பேச்சை நிறைவு செய்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.