முகப்பு /செய்தி /ஈரோடு / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: போலீசாருடன் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: போலீசாருடன் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

நாதக, போலீஸ் இடையே வாக்குவாதம்

நாதக, போலீஸ் இடையே வாக்குவாதம்

காவல்துறை துணை கண்காணிப்பாளர் சேகர், 3 பேர் நின்று சின்னத்தைக் காட்ட அனுமதியில்லை எனக் கூறியதாகத் தெரிகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சியினர் சாலையின் ஓரத்தில் நின்று கட்சியின் சின்னத்தைக் காட்டியவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் சேகர், 3 பேர் நின்று சின்னத்தைக் காட்ட அனுமதியில்லை எனக் கூறியதாகத் தெரிகிறது. தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியினரிடமிருந்து செல்போனை அவர் பறித்து உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் நாம் தமிழர் கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

First published:

Tags: Erode Bypoll, Erode East Constituency, Naam Tamilar Cadre, Police