முகப்பு /செய்தி /ஈரோடு / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : கழுத்தில் செருப்பு மாலை... காந்தி வேடம்... நூதன முறையில் மனுதாக்கல் செய்த வேட்பாளர்கள்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : கழுத்தில் செருப்பு மாலை... காந்தி வேடம்... நூதன முறையில் மனுதாக்கல் செய்த வேட்பாளர்கள்!

சுயேச்சை வேட்பாளர்கள்

சுயேச்சை வேட்பாளர்கள்

Erode By poll election | ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் காலை முதலே வேட்பாளர்கள் ஆர்வமாக சென்று மனு தாக்கல் செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode | Erode

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், முதல்நாளில் நூதன முறையில் சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கியது. காலை முதலே சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர். முதல் நாளான இன்று சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் முதல் வேட்பாளராக தனது வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் சிவக்குமாரிடம் தாக்கல் செய்தார்.

தேர்தல் மன்னனான பத்மராஜன் இதுவரை 233 முறை பல்வேறு தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். 234 ஆவது முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தனது வேட்பு மனுவை அவர். தாக்கல் செய்துள்ளார். இதே போல் காந்தியவாதி ரமேஷ் , காந்தி வேடம் அணிந்து தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் டெபாசிட் தொகை பத்தாயிரம் ரூபாயை, பத்து ரூபாய் காயின்களாக மாற்றிய ரமேஷ் என்பவர் தனது வேட்பு மனுவை அந்த தொகையின் மூலம்  தாக்கல் செய்தார். பத்து ரூபாய் காயின்களை  அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே டெபாசிட் தொகையை பத்து ரூபாய் காயின்களாக மாற்றி  கட்டுவதாக காந்தியவாதி ரமேஷ் தெரிவித்தார்.

இதே போல மதுரையைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் சங்கர பாண்டியன், கையில் பண தூண்டிலுடன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வாக்களிக்க பணம் வாங்கக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பண தூண்டிலுடன் வந்து தனது  வேட்பு மனுவை தாக்கல் செய்ததாக அவர் தெரிவித்தார்.

இதேபோல கோவையைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் நூர்முகமது கழுத்தில் செருப்பு மாலை அணிந்தபடி வந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பொதுமக்களுக்கு நேரம், காலம் பார்க்காமல் செருப்பாக உழைப்பேன் என்பதை உணர்த்தும் விதமாக கழுத்தில் செருப்பு மாலை அணிந்தபடி வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்வதாகவும், இதுவரை 41 தேர்தல்களில் போட்டியிட்டு இருப்பதாகவும் கோவையைச் சேர்ந்த தேர்தல் மன்னன் நூர்முகமது தெரிவித்தார்.

First published:

Tags: By election, Candidates, Erode, Erode Bypoll, Local News