முகப்பு /செய்தி /ஈரோடு / பணப்பட்டுவாடா.. ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.. அறப்போர் இயக்கம் வலியுறுத்தல்!

பணப்பட்டுவாடா.. ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.. அறப்போர் இயக்கம் வலியுறுத்தல்!

மாதிரி படம்

மாதிரி படம்

Erode By Election : பணப்பட்டுவாடா நடைபெறுவதால் ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அறப்போர் இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவதால் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து புகார் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. எனவே, ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இதில் போட்டியிடும் வேட்பாளர் மீண்டும் போட்டியிடாத வகையில் தகுதி நீக்க செய்ய வேண்டும். அது தொடர்பான சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற பிரச்சாரங்களில் வாக்காளர்களுக்கு பல்வேறு விதமாக லஞ்சங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். பணத்தினுடைய மிகப்பெரிய தாக்கம் இந்த தேர்தலில் உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் அடங்கிய வீடியோவை சமர்ப்பித்துள்ளோம். திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலா, ஆர்.கே.நகர் தேர்தல் ஃபார்முலா என்பது போல ஈரோடு கிழக்கு தொகுதி ஃபார்முலா என ஒன்று உருவாகி உள்ளது. ஆகையால் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்” என ஜெயராம் தெரிவித்தார்.

First published:

Tags: Election, Erode, Tamilnadu