முகப்பு /செய்தி /ஈரோடு / இல்லத்தரசிகள் ஒவ்வொருவருக்கும் முதலமைச்சர் ரூ.24,200 கடன் தரணும்.. இபிஎஸ் பேச்சு..!

இல்லத்தரசிகள் ஒவ்வொருவருக்கும் முதலமைச்சர் ரூ.24,200 கடன் தரணும்.. இபிஎஸ் பேச்சு..!

இபிஎஸ் மற்றும் ஸ்டாலின்

இபிஎஸ் மற்றும் ஸ்டாலின்

EPS Campaign in Erode East by Election | அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கணபதி நகர் முதல் பெரியார் நகர் வரை பிரச்சாரத்தில் ஈடுபட வந்த  எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பின்னர் பரப்புரையில் ஈடுபட்ட அவர், அதிமுக ஆட்சியில்தான் ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டதாகவும், பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்ததாகவும் குறுப்பிட்டார்.

மேலும், மக்களை ஒளித்து வைத்தாலும், கூண்டில் அடைத்து வைத்தாலும், அவர்கள் அதிமுகவுக்குதான் வாக்களிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டதாக, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.  இல்லத்தரசிகள் ஒவ்வொருவருக்கும் முதலமைச்சர் 24, 200 ரூபாய் கடன்பட்டிருப்பதாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆலமரத்து வீதியில் பிரச்சாரத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 75 கிலோ கேக்கை கே.பி.முனுசாமியுடன் இணைந்து வெட்டி தொண்டர்களுக்கு கொடுத்தனர் .பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தோல்வி பயத்தின் காரணமாகவே, ஆளுங்கட்சியின் 33 அமைச்சர்கள், இந்த தொகுதியில் ஒரு மாதமாக வேலை செய்து வருவதாக விமர்சித்தார். மேலும், பொதுமக்கள் தூங்காமல் பரிசுப் பொருட்களுக்காக கதவை திறந்து வைத்துள்ளதாகவும் கூறினார்.

First published:

Tags: ADMK, EPS, Erode East Constituency