முகப்பு /செய்தி /ஈரோடு / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் யார்? எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் யார்? எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

இபிஎஸ்

இபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுவது யார் என்பது குறித்து முடிவு செய்ய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, விஜயபாஸ்கர், கே.வி.ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விடியல் சேகர், ஆறுமுகம் ஆகியோரும் பங்கேற்றனர். 6 மணி நேரம் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. இதில் தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

First published:

Tags: EPS, Erode Bypoll, Erode East Constituency