ஹோம் /நியூஸ் /ஈரோடு /

ஈரோடு மாவட்டத்தில் கனமழை! குறிப்பிட்ட ஏரியா பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த ஆட்சியர்!

ஈரோடு மாவட்டத்தில் கனமழை! குறிப்பிட்ட ஏரியா பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த ஆட்சியர்!

மாதிரி படம்

மாதிரி படம்

அந்தியூர் வட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக்/சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு நாளை  ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Erode, India

  கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்திற்குட்பட்ட மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

  தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு  சுழற்சி காரணமாக இன்று (16.10.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

  இதையும் படிங்க : பிரதமர் மோடியின் உத்தரவு.. 76 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருவார்கள்'' - அண்ணாமலை பேச்சு

  மேலும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  அதேபோல் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

  இந்த நிலையில் நாளை ஈரோடு மாவட்டம்  அந்தியூர் வட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்தியூர் வட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை,

  மேல்நிலை மற்றும் மெட்ரிக்/சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு நாளை (அக்டோபர் 17)  ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அறிவித்துள்ளார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Erode, School Leave