முகப்பு /செய்தி /ஈரோடு / எம்ஜிஆர், சிவாஜி என பல கலைஞர்கள் உருவாக்கியது கருணாநிதியின் பேனா : அமைச்சர் துரைமுருகன் பேச்சு

எம்ஜிஆர், சிவாஜி என பல கலைஞர்கள் உருவாக்கியது கருணாநிதியின் பேனா : அமைச்சர் துரைமுருகன் பேச்சு

ஈரோடு கிழக்கு தேர்தலில் திமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன்

ஈரோடு கிழக்கு தேர்தலில் திமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன்

Minister Duraimurugan Speech In Erode East | ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளிலே உட்கார்ந்த இடத்திலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியை தன் வசப்படுத்தியுள்ளதாக துரைமுருகன் பேச்சு

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • erode, India

சிவாஜி கணேசன், எம்ஜிஆர் என கலைஞர்கள் பலரை உருவாக்கியது கருணாநிதியின் பேனா என திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்து வருகின்றது. ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் உள்ள திமுக தேர்தல் அலுவலகத்திற்கு திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான துரைமுருகன், அதேபோல் தமிழ்நாடு அமைச்சர்கள் முத்துச்சாமி, கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், காந்தி, சிவசங்கர் ரகுபதி, மெய்யநாதன், கீதாஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த், ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது திமுக கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தி உள்ளது என்று கூறுவதை விட திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நிறுத்தி உள்ளார் என்பதுதான் சரியாக இருக்கும் என்றும் திமுகவுக்கு ஒரு பண்பாடு உண்டு. இந்த உள்ளன்போடு வேலை செய்வோமோ அதே போல் தோழமை கட்சி போட்டியிட்டாலும் உள்ளன்போடு பணி செய்வோம் என கூறினார்.

பெரியார் தோன்றவில்லை என்றால் காட்டுமிராண்டிகளாக வறுமை கோட்டிற்கு கீழ் உளள்வர்களாக இருந்திருப்போம். ஒரு மனிதன் அனைத்தையும் புரட்டி போட்டுள்ளார். பல மாநிலங்களில் பலரும் சீர்திருத்தத்தை முன்னிறுத்தினாலும் அந்த சீர்த்திருத்தில் வெற்றி பெற்றவர் பெரியார் மட்டுமே என பேசிய துரைமுருகன், இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில் நம்பர் ஒன் தமிழ்நாடு முதலமைச்சர் என்று எழுதி உள்ளனர். அதற்கு அவர் நான் நம்பர் ஒன்றில்  இருப்பதைவிட தமிழ்நாடு நம்பர் ஒன்றாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறியதாக துரைமுருகன் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த தேர்தலில் அமைச்சர் முத்துசாமியிடம் மட்டுமே கொடுத்திருந்தால் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தி இருப்பார். ஆனால் நமக்கு எதிர் தரப்பில் உள்ளவர்கள் வெளி ஆட்களை கொண்டு வந்து பணி செய்கிறார்கள். அதனால் இங்கு அமைச்சர் பெருமக்கள் பணி செய்வதாக தெரிவித்த துரைமுருகன், அவர்கள் சாதாரண ஆட்கள் இல்லை உலகை சுருட்டி காட்டக்கூடிய ஆற்றல் மிக்கவர்கள் அதனால் நாம் 75 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றியடைய வேண்டும் என்றும் தேர்தலில் பணி செய்யக்கூடியவர்கள் அடக்கத்தோடு பணியாற்றி கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.

இதையும் படிங்க: மர்மமாக இருக்கிறது”.. ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்..!

கலைஞர் கருணாநிதியிடம் பல ஆண்டுகளுக்குப் பிறகே டெல்லி அவர் வசப்பட்டது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளிலேயே உட்கார்ந்த இடத்திலேயே டெல்லியை வசப்படுத்திய ஆற்றல் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வந்துள்ளது. அப்பாவை மிஞ்சக்கூடிய நபராக தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார் என்றும் தற்போது சட்ட ஒழுங்கு பிரச்சனை சரி இல்லை என்றெல்லாம் பிரச்சாரம் செய்யவில்லை. பேனா வைப்பதை முன்னுறுத்தி பிரச்சாரம் செய்வதாக துரைமுருகன் விமர்சனம் செய்தார்.

எடப்பாடி பழனிச்சாமி முதற்கொண்டு பேனாவை வீட்டில் வைக்க மாட்டார்களா என்று கேட்கிறார்கள். பேனாவை வீட்டில் வைக்க மாட்டார்கள். அதை பாக்கெட்டில்தான் வைப்பார்கள் என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும், கலைஞர் கருணாநிதியின் பேனா தமிழை உயர்த்தி பிடித்த பேனா, கவிக்கு உயிர் கொடுத்த பேனா அதை தமிழ் கவிஞர்கள் பாராட்டியுள்ளார்கள். அந்தப் பேனா சிவாஜி கணேசன், எம்ஜிஆர் என கலைஞர்கள் பலரை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் அந்த ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.

First published:

Tags: Erode East Constituency, Local News