ஹோம் /நியூஸ் /ஈரோடு /

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : வேட்பாளரை அறிவிக்கும் முன்பே களத்தில் இறங்கிய அமைச்சர்கள்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : வேட்பாளரை அறிவிக்கும் முன்பே களத்தில் இறங்கிய அமைச்சர்கள்!

வாக்கு சேகரிப்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி

வாக்கு சேகரிப்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி

திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சி களமிறங்கும் எனவும் அதிமுக கூட்டணி சார்பில் அதிமுகவே களமிறங்கும் எனவும் உறுதியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Erode, India

இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. தற்போது நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவித்தபோதே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஜனவரி 31 வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் மார்ச் 02 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சி களமிறங்கும் எனவும் அதிமுக கூட்டணி சார்பில் அதிமுகவே களமிறங்கும் எனவும் உறுதியாகியுள்ளது. ஆனால் இரு தரப்பினரும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை,

இந்நிலையில், திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு வீட்டு வசதித் துறை அமைச்சரும் , தெற்கு மாவட்டச் செயலாளருமான முத்துசாமி, வாக்கு சேகரிக்கும் பணியை ஆரம்பித்தார். பெரியார் நகர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து காங்கிரஸின் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

ஈரோடு, பெரியார் நகரில், உழவர் சந்தை மற்றும் கருப்பணசாமி கோயில் வீதிகளில் பொதுமக்களிடம் கே.என்.நேரு வாக்கு சேகரித்தார். அரசின் நலத் திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொண்டார்களா இல்லையா என்பது மார்ச் இரண்டாம் தேதி தெரியும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

First published:

Tags: DMK, Erode Bypoll, Erode East Constituency, KN Nerhu