தேமுதிகவின் பலத்தைக் காட்டவே இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஈரோட்டில் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து அன்னை சத்யா நகர் பகுதியில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அன்னை சத்யா நகர் பகுதியில் வீடு வீடாக நடந்து சென்று விஜயபிரபாகரன் வாக்குகளை சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தேமுதிக சார்பாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றோம் என்றும் மக்கள் மத்தியில் கேப்டனுக்கும், தேமுதிகவுக்கும், வேட்பாளர் ஆனந்திற்கும் நல்ல வரவேற்பு இருக்கின்றது என தெரிவித்தார்.
கட்சி கொடியினையும், முரசு சின்னத்தையும் பார்த்து ஏராளமான பொது மக்கள் வெளியில் வருகின்றனர். அதை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது . தேமுதிக ஏற்கனவே திமுக, அதிமுகவை எதிர்த்தே வளர்ந்த கட்சி. சில சமயம் கூட்டணி வைத்திருக்கிறது. இப்போது எங்கள் பலத்தை நிரூபிக்க கேப்டன் உத்தரவுபடி தனித்து நிற்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியா என்பது தேர்தல் வரும் போது சொல்வோம் என்றார்.
மேலும் கலங்கிய குட்டை என்பதால் கூட்டணி வைக்கவில்லை என பொருளாளர் பிரேமலதா சொல்லி இருப்பது குறித்த கேள்விக்கு இதற்கு அவரே விளக்கம் கொடுப்பார் என பதில் அளித்தார். ஈரோடு கிழக்கில் முரசு சத்தம் ஒலிக்கும் என தெரிவித்தவர்,எல்லா தேர்தலிலும் பணம் கொடுக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Erode, Erode East Constituency, Local News, Tamil News