ஹோம் /நியூஸ் /ஈரோடு /

ஈரோடு இடைத்தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா.? அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால்

ஈரோடு இடைத்தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா.? அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால்

அண்ணாமலை - காயத்ரி ரகுராம்

அண்ணாமலை - காயத்ரி ரகுராம்

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் அந்த தொகுதியில் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்த்கலில் நீங்கள் ஏன் என்னை எதிர்த்து போட்டியிட கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் அந்த தொகுதியில் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏன் என்னை எதிர்த்து போட்டியிட கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அண்ணாமலை நீங்கள் தமிழ்நாட்டில் மிகவும் பெரிய தலைவர். ஓப்டிக்ஸ் படி உங்களுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறலாம். ஈரோடு இடைத்தேர்தலில் நீங்கள் ஏன் என்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறக்கூடாது? இடைத்தேர்தலில் கூட்டணியில் உள்ளீர்களா?

அல்லது தனித்து போட்டியிடுகிறீர்களா? அல்லது சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முடியுமா? இடைத்தேர்தலுக்காக குழுவை அமைத்துள்ளீர்களா? எனவே நீங்கள் போட்டியிடுகிறீர்களா இல்லையா என்பதை ஏன் அறிவிக்கக்கூடாது.. அதற்கு ஏன் ஒரு குழு?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

காயத்ரி ரகுராம் நரேந்திர மோடிக்கு தனது மரியதையும் ஆதரவும் இருப்பதாகவும் தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என விலகியது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Annamalai, Erode Bypoll, Erode East Constituency, Gayathri Raguramm