ஹோம் /நியூஸ் /ஈரோடு /

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டி - கே.எஸ் அழகிரி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டி - கே.எஸ் அழகிரி அறிவிப்பு

கே.எஸ் அழகிரி

கே.எஸ் அழகிரி

இதே தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என ஜி.கே வாசன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தற்போது நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவித்தபோதே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸே போட்டியிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அறிவித்துள்ளார்.

இதே தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என ஜி.கே வாசன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Congress, DMK Alliance, Erode, Erode Bypoll, Erode East Constituency