ஹோம் /நியூஸ் /ஈரோடு /

கனமழை காரணமாக அந்தியூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

கனமழை காரணமாக அந்தியூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

மாதிரி படம்

மாதிரி படம்

கனமழை காரணமாக அந்தியூரில் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள நீர் காரணமாக போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Erode, India

    கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்தியூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    Also Read : சின்ன சின்ன அன்பில்தானே.. உதவி கேட்டவருக்கு 201 ரூபாய்! - கண்கலங்க வைக்கும் சம்பவம்.!

    இந்நிலையில் கனமழை காரணமாக அந்தியூர் வட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை,மேல்நிலை மற்றும் மெட்ரிக்/சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இன்று (அக்டோபர் 17) ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அறிவித்துள்ளார்.

    கனமழை காரணமாக அந்தியூரில் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளநீர் காரணமாக போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Published by:Raj Kumar
    First published:

    Tags: Erode, Rain, School, School Leave