Home /News /erode /

அரசு விழாக்கள் எங்களது புகழ் பாட அல்ல... மக்களுக்கு என்ன செய்கிறோம் என்பதை விளக்கும் விழாக்கள் - முதல்வர் ஸ்டாலின்

அரசு விழாக்கள் எங்களது புகழ் பாட அல்ல... மக்களுக்கு என்ன செய்கிறோம் என்பதை விளக்கும் விழாக்கள் - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

CM MK Stalin | அரசு விழாகள் எங்களது புகழ் பாட நடக்கும் விழாகள்  அல்ல என்றும்  மக்களுக்கு என்ன செய்கிறோம் என்பதை விளக்கும் விழாக்கள் என ஈரோட்டில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Erode, India
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று வந்தார். கோபி அருகே கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்த முதல்வர் அங்கிருந்து ஈரோடு வந்தார். அப்போது பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை பெருந்துறை அருகே நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, 261.57 கோடி மதிப்பீட்டில்   135 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் , 183.70 கோடி மதிப்பில்  1761 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் , 167.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    அதன் பின்னர் விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , ஈரோடு என்பது தமிழராகிய நாம் உணர்வோடு கலந்த ஊர். பெருந்துறை அருகே திங்களுரில் தமிழ்சங்கம் இருந்ததாக வரலாறு கூறுகிறது. .சிலர் செய்யும் பணி அடக்கமாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்கும்.  கடந்த ஓராண்டில் பல்வேறு துறைகள் சார்பில் எண்ணற்ற பணிகள் செய்யப்பட்டுள்ளது.  ஈரோடு , தாளவாடி , நல்லாம்பட்டி  , போன்ற பகுதிகளில் சுமார ரூ.6  கோடி மதிப்பில் குளிர்பாதன கிடங்கு அமைக்கப்படும்.

    ஈரோடு மாவட்டத்தை அனைத்திலும் முதன்மையாக மாற்ற பணிகளை செய்து வருவதாகவும்  , அவினாசி - அத்திகடவு திட்ட பணிகளை பார்வையிட்டு துரிதமாக நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் , சில மாதங்களில் பணிகள் முடிவுற்று நானே தொடங்கி வைப்பேன் என்று உறுதளித்தார்.அரசு விழாகள்  பொழுதுபோக்கிற்கிற்காக நடக்கும் விழாவே , எங்களது புகழ் பாட நடக்கும் விழாகள்  அல்ல என்றும்  மக்களுக்கு என்ன செய்கிறோம் என்பதை விளக்கும் விழாக்கள் என்றார்.

    Also Read : அண்ணாமலை பேசியதாக பரவும் ஆடியோ போலியானது - பாஜக விளக்கம்

    தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் , எனக்கு  புகழ் தேவையில்லை.  என் உயிர் இருக்கும் வரை மக்களுக்காக  உழைப்பேன். அனைத்து தர  மக்களும் உயர்வு பெறும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் நெல் சாகுபடி  பரப்பு அதிகரித்து மூலம்  மக்களை மட்டுமல் கண்ணை காக்கும் அரசாக இந்த அரசு செயல்படுகிறது.  தமிழக வரலாற்றில் வேளாண்துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. , குறுவை சாகுபடிக்காக முன் கூட்டியே திறந்து கடைமடை பகுதி வரை நீர் செல்ல தூர் வாரப்பட்டுள்ளது.

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு உயர் நீதிமன்றம் சட்டபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதை அண்ணா , பெரியார் இருந்து இருந்தால் சந்தோசம் அடைந்து இருப்பார்கள், இது நமது கொள்ககைக்கு கிடைத்த வெற்றி.  திராவிட மாடல் அரசு இந்தியாவிற்கே  வழிகாட்டியும் அரசாக வழங்கி வருவதாகவும் , இல்லம் தேடி கல்வி , பெண்களுக்கான இலவச பேருந்து  பயணம் , வீடு தேடி மருத்துவம் என தமிழக திட்டங்களை பல்வேறு மாதிலங்கள் பின்பற்றி வருவதாகவும் , தமிழகத்தில் சிசு மரணம்  குறைவு , பட்டினி சாவு  என தெரிவித்தார்.

    இதற்காக நித்தமும் உழைக்கிறேன் என்ற ஸ்டாலின் நான் வாழ்ந்த காலத்தில் தமிழ் சமுதாயம் நிமிர உழைப்பதாகவும் , கோட்டையில் இருந்தாலும் உங்கள் உள்ளங்களல் வாழ்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரவித்தார்.

    செய்தியாளர் : பாபு, ஈரோடு
    Published by:Vijay R
    First published:

    Tags: CM MK Stalin, Erode

    அடுத்த செய்தி