Home /News /erode /

ஆன்லைன் சூதாட்டத்தால் கடன்... செயின் திருடனாக மாறிய பொறியியல் பட்டதாரி

ஆன்லைன் சூதாட்டத்தால் கடன்... செயின் திருடனாக மாறிய பொறியியல் பட்டதாரி

ஈரோட்டில் இளைஞர் கைது

ஈரோட்டில் இளைஞர் கைது

Erode District News: அந்தியூர் அருகே பட்ட பகலில் வீட்டின் வெளியே தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 7 பவுன் தாலி செயினை பறித்து  சென்ற சம்பவத்தில் பொறியியல் பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Erode, India
    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அத்தாணி கருப்பண்ண கவுண்டன் புதூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி விஜயலட்சுமி கடந்த 25ம் தேதி வீட்டின் வெளியே தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியாக வந்த மர்ம நபர் விஜயலட்சுமி கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றுள்ளார்.

    அவரிடம் இருந்து தனது தாலி செயினை காப்பாற்ற முயன்ற விஜயலட்சுமி, நிலை தடுமாறி  கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அந்த மர்ம நபர் விஜயலட்சுமி கழுத்தில் இருந்த ஏழு பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து விஜயலட்சுமி  ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் அத்தாணி பகுதியில் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளார்.

    அவரை மடக்கி பிடித்த போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள வளையபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பதும் ,  விஜயலட்சுமியிடம்  7 பவுன் தங்க தாலி சங்கிலியை கொள்ளை அடித்து விட்டு தப்பியோடியதும் தெரியவந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பொறியியல் பட்டதாரியான கார்த்திக் திருமணமான நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து கடனாளியானதால்,  கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது  தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து ஏழு பவுன் தாலிச் சங்கிலியை மீட்ட போலீசார் கார்த்தியின் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து, பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Must Read : லாட்ஜில் காதலியுடன் தனிமையில் இருந்த சிறை கைதி.. உதவிய போலீஸ் மீது நடவடிக்கை

    ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்த இளைஞர், கடனை அடைக்க நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  தற்கொலை, கொள்ளை ஆகியவற்றை தூண்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தமிழக அரசு தீவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    செய்தியாளர் - தினேஷ்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chain Snatching, Crime News, Erode, Loan, Online rummy

    அடுத்த செய்தி