முகப்பு /செய்தி /ஈரோடு / ஜார்க்கண்ட் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார்.. முதலமைச்சர் சொன்ன வாழ்த்து..!

ஜார்க்கண்ட் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார்.. முதலமைச்சர் சொன்ன வாழ்த்து..!

சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு

சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Jharkhand, India

பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமித்து அண்மையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார். தமிழ்நாட்டு பாஜக தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் சி.பி.ராதாகிருஷ்ணன். 2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்து கட்சியை வளர்த்த அவர், 1998, 1999 என இரண்டு முறை கோவை தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தேசிய கயிறு வாரியத் தலைவராகவும் பதவியில் இருந்துள்ளார்.

ஆளுநராக நியமிக்கப்பட்டவர் அரசியல் சார்ந்தோ, அரசு அமைப்புகளிலோ பதவியில் இருக்கக் கூடாது என்பது விதி என்பதால் கடந்த 15ம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜகவில் இருந்து விலகும் கடிதத்தை சி.பி.ராதாகிருஷ்ணன் அளித்தார்.

இந்த நிலையில் ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பூங்கொத்து அளித்து வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகப் பதவியேற்ற மரியாதைக்குரிய சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மாநிலத்தின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் உங்களின் வழிகாட்டுதல் எப்போதும் இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று கூறியுள்ளார்.

First published:

Tags: CP Radhakrishnan, Jharkhand