Home /News /erode /

பண்ணாரி நெடுஞ்சாலையில் விளையாடும் காட்டுயானைகள் - வைரலான வீடியோ

பண்ணாரி நெடுஞ்சாலையில் விளையாடும் காட்டுயானைகள் - வைரலான வீடியோ

யானைகள்

யானைகள்

SATHYAMANGALAM | பண்ணாரி சோதனை சாவடியில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 2 யானைகள் ஒன்றோடொன்று தலையை முட்டி மோதி விளையாடிக் கொண்டிருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sathyamangalam | Tamil Nadu
    பண்ணாரி சோதனை சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விளையாடிய காட்டுயானைகளின் வீடியோ வெளியான நிலையில், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் திம்பம் மலைப்பாதை வழியாக மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் மாலை 6 மணிக்கு மேல் வெளி வாகனங்கள், கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. உள்ளூர் வாகனங்கள் மட்டுமே இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

    இதனால் இரவு நேரங்களிலும் யானைகள் சாலையில் வந்து நிற்பதும் உலா வருவது வழக்கமாகி வருகிறது. நேற்று இரவு பண்ணாரி சோதனை சாவடியில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 2 யானைகள் ஒன்றோடொன்று தலையை முட்டி மோதி விளையாடிக் கொண்டிருந்தது.

    ALSO READ | ஆ.ராசா விவகாரம்.. திமுக குழப்பத்தில் உள்ளது - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்

    அதைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சத்தில் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி காத்திருந்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக விளையாடி யானைகள் பின்னர் காட்டுக்குள் சென்றனர். இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோவை கண்ட வனத்துறையினர், யானைகள் சாலையில் நின்றால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும், வேகமாக ஹாரன் அடிக்கவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Elephant, Sathyamangalam

    அடுத்த செய்தி