ஹோம் /நியூஸ் /ஈரோடு /

ஈரோட்டில் ரூ.2 கோடியுடன் கடத்தப்பட்ட கார்.. அதிகாலையில் பகீர் சம்பவம்

ஈரோட்டில் ரூ.2 கோடியுடன் கடத்தப்பட்ட கார்.. அதிகாலையில் பகீர் சம்பவம்

கடத்தப்பட்ட கார்

கடத்தப்பட்ட கார்

Erode Robbery | காரில்  எதற்காக இரண்டு கோடி ரூபாய் பணம் கொடுத்து வந்தனர் என்பதும் ,  காரை கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Erode, India

2 கோடி ரூபாயுடன் காரில் வந்தவரை மிரட்டி காரை கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த விகாஷ் என்பவர் காரில் கோயம்புத்தூருக்கு வந்துள்ளார். இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள இலட்சுமி நகர் பகுதியில் வந்த போது ஐந்து பேர் கொண்ட கும்பல் இவரது காரை வழிமறித்து, காரில் இருந்த விகாஷை இறக்கி விட்டு விட்டு காரை கடத்திச் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் விகாசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விகாஸ் காரில் சுமார் 2 கோடி ரூபாய் பணம் இருந்ததாக கூறியிருக்கிறார். தொடர்ந்து விகாஷிடம் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் கடத்தப்பட்ட காரை டெக்ஸ்வேலி ஜவுளி சந்தை அருகே மீட்டுள்ளனர்.

காரில்  எதற்காக இரண்டு கோடி ரூபாய் பணம் கொடுண்டு வந்தார் என்பதும் ,  காரை கடத்தி வந்தவர்கள் யார், பணம் கொள்ளை போனதாக ஓட்டுநர் தரும் தகவல் உண்மையானதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

செய்தியாளர் : மா.பாபு  (ஈரோடு)                     

First published:

Tags: Crime News, Erode, Local News