முகப்பு /செய்தி /ஈரோடு / எம்.ஜி.ஆர்.. ஜெயலலிதா படத்துடன் பிரமாண்ட மோதிரம்.. ஈரோடு தேர்தலில் கவனம் ஈர்க்கும் ‘மோதிரம் பொன்னுச்சாமி’..!

எம்.ஜி.ஆர்.. ஜெயலலிதா படத்துடன் பிரமாண்ட மோதிரம்.. ஈரோடு தேர்தலில் கவனம் ஈர்க்கும் ‘மோதிரம் பொன்னுச்சாமி’..!

மோதிரம் பொன்னுசாமி

மோதிரம் பொன்னுசாமி

மோதிரம் பொன்னுச்சாமி என்பவர் கையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைபடங்களுடன் கூடிய  பிரமாண்ட தங்க மோதிரங்களுடன் வாக்கு சேகரித்து வருகின்றார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு இடைத்தேர்தலில் கையில் பிரமாண்ட தங்க  மோதிரங்களுடன் அதிமுக தொண்டர் ஒருவர் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் வந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த மோதிரம் பொன்னுச்சாமி என்பவர் கையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைபடங்களுடன் கூடிய  பிரமாண்ட தங்க மோதிரங்களுடன் வாக்கு சேகரித்து வருகின்றார்.

எம்ஜிஆர் மறைந்த போது கையில்  அவர் புகைப்படத்துடன் 10 பவுண் தங்க மோதிரம் போட்டதாகவும், அதன் பின் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற போது  11 பவுணில் தங்க மோதிரம் போட்டதாகவும் அவற்றை இப்போது வரை தினமும் அணிந்து வருவதாக பொன்னுசாமி தெரிவிக்கின்றார்.

மேலும் இடது கையில் 88 கிராமில் எடப்பாடி பழனிச்சாமி புகைபடத்துடன் கூடிய ஒரு மோதிரம், 88 கிராமில் எம்.ஜி.ஆர் புகைபடத்துடன் கூடிய மற்றொரு மோதிரம் என இரு பிரமாண்ட தங்க மோதிரம், இரு வெள்ளி மோதிரம் அணிந்து மோதிரம் பொன்னுசாமி வீடு்வீடாக வாக்கு சேகரித்து வருகின்றார். பெரிய சைஸ் மோதிரத்தை வாக்காளர்களும், பொது மக்களும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

First published:

Tags: ADMK, Edappadi Palanisami, Erode, Erode Bypoll, Jayalalitha, Local News, MGR