முகப்பு /செய்தி /ஈரோடு / தொண்டர்கள் ஈபிஎஸ் பக்கம்தான்.. தர்மம் எப்போதும் வெல்லும் - கே.பி.முனுசாமி

தொண்டர்கள் ஈபிஎஸ் பக்கம்தான்.. தர்மம் எப்போதும் வெல்லும் - கே.பி.முனுசாமி

கே.பி.முனுசாமி

கே.பி.முனுசாமி

அதிமுக தொண்டர்கள் முழுவதும் கழகத்தின் இடைக்கால  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கின்றனர் - கே.பி.முனுசாமி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தர்மம் எப்போதும் வெல்லும் என்பதை காட்டி இருப்பதாகவும், தொண்டர்கள் முழுவதும் கழகத்தின் இடைக்கால  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடமே இருக்கின்றனர் எனவும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

ஈரோடு வில்லரசன்பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன்,  தங்கமணி, வேலுமணி, செம்மலை, எம்.சி. சம்பத், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பண்ணன், கே.வி.ராமலிங்கம், காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

அதிமுக நிர்வாகிகள்

இவர்களுடன் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசும் பங்கேற்றார். ஈரோடு கிழக்கு  இடைதேர்தல் தொடர்பாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ,எப்பொழுதும் சோதனைகள் வந்தாலும் கூட தர்மம் நிச்சயம் வெல்லும்  என தெரிவித்தார்.

மேலும் பேசியவர், “உச்சநீதிமன்றம் கூட இரண்டு தலைவர்களிடம்  தொண்டர்களிடம் செல்லுங்கள், தொண்டர்கள் யாருக்கு தீர்ப்பு கொடுக்கின்றனரோ அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறது. அந்த தொண்டர்கள் முழுவதும் கழகத்தின் இடைக்கால  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கின்றனர். தர்மம்  எப்பொழுதும் வெல்லும் எனத் தெரிவித்தார்.

First published:

Tags: ADMK, Erode, Erode Bypoll, Local News, Tamil News