ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த புஞ்சை புளியம்பட்டி தேசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த யுவராணி, அதேபகுதியில் உள்ள டானா புதூர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய கணவர் அருட்செல்வன் சிவில் இஞ்சினியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சஞ்சய் என்ற மகனும், ஆறாம் வகுப்பு படிக்கும் தர்ஷினி ஸ்ரீ என்ற மகளும் இருக்கின்றனர்.
மகன் சஞ்சய் படிப்பில் அதிக நாட்டம் இல்லாமல் இருந்துள்ளார். அதனால் அவரை சத்தியமங்கலம் தனியார் பள்ளி ஹாஸ்டலில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் ஹாஸ்டலில் இருந்து வீட்டுக்கு வந்த மாணவன் நேற்று இரவு ஹாஸ்டலுக்கு செல்லமாட்டேன் என்று தாயுடன் சண்டையிட்டு உள்ளார்.
அதற்கு தாயார் யுவராணி நீ கண்டிப்பாக காலையில் ஹாஸ்டலுக்கு செல்லதான் வேண்டும். அப்பா வந்தவுடன் சொல்லிவிட்டு கிளம்புவோம் என கூறிவிட்டு, பின்பு சமாதானமாகி இரவு தாய் மகன், மகள் வீட்டில் உறங்கியுள்ளனர்.
இந்தநிலையில் இரவு 12 மணிக்கு சஞ்சய் காலையில் ஹாஸ்டலுக்கு அனுப்பி விடுவார்கள் என பயந்து அங்கிருந்த வீடு கட்ட பயன்படும் ஹாலோ பிளாக் கல்லை எடுத்து வந்து தூங்கிக்கொண்டிருந்த தாய் தலையில் போட்டுள்ளார்.
உடனே தாயின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த மகள் கூச்சலிட்டு கத்தியுள்ளார். இதையடுத்து கீழ் வீட்டில் இருந்த அவர்களது உறவினர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Also see...நூதன தண்டனை வழங்கிய காவல் ஆய்வாளர்
இந்நிலையில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சஞ்சய் தலைமறைவாகி உள்ளதால், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர்: தினேஷ், கோபி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Erode, Mother, Murder, Police