Home /News /erode /

போதைக்காக ஆன்லைனில் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்திய இளைஞர்கள்... ஈரோட்டில் கைது

போதைக்காக ஆன்லைனில் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்திய இளைஞர்கள்... ஈரோட்டில் கைது

போதைக்காக ஆன்லைனில் மாத்திரைகளை வாங்கிய இளைஞர்கள்

போதைக்காக ஆன்லைனில் மாத்திரைகளை வாங்கிய இளைஞர்கள்

Erode district news : ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தும் மாத்திரைகளை ஆன்லைன் மூலம் போதைக்காக வாங்கி பயன்படுத்திய 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Erode, India
    ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக இளைஞர்கள் சிலர் போதை மாத்திரைகளை பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது.  இதன் பெயரில் அந்தியூர் போலீசார் சோதனை மேற்கொண்டதில் சந்தேகத்திற்கு உரிய வகையில் இருந்த இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அவர்கள் அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார், சசிகுமார், யுவராஜ், விக்னேஷ் மற்றும் ஒரு யுவராஜ் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் நடந்தப்பட்ட விசாரணியில், இணையதளம் வாயிலாக  14 ஆயிரம் ரூபாய் செலுத்தி மருத்துவரின் மருந்து சீட்டு பரிந்துரை இன்றி, அறுவை சிகிச்சைக்கா பயன்படுத்தும் மாத்திரைகளை வாங்கி போதைக்காக பயன்படுத்தியது தெரிய வந்தது.

    அந்த மாத்திரைகளை இவர்கள் பயன்படுத்தியது மட்டுமின்றி, அந்தியூர் பகுதியில் அந்த மாத்திரைகளை விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து இளைஞர்களை பிடித்த போலீசார், சட்டவிரோதமாக உரிய மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் போதைக்காக மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்னர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்த இளைஞர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 100 மாத்திரைகள் கொண்ட பத்து அட்டைகளை பறிமுதல் செய்துனர். மேலும், அந்த இளைஞர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், போலீசார் சுற்றி வளைத்த போது அங்கிருந்து தப்பி ஓடிய பாலாஜி மற்றும் கண்ணன் ஆகிய  இரண்டு இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    Must Read : போலி அரெஸ்ட் வாரண்ட் தயாரித்து மில் உரிமையாளரை கடத்த முயற்சி.. ஆந்திராவை சேர்ந்த 3 பேர் கைது

    இதேபோல், நேற்று சித்தோடு பகுதியில் வினித் குமார் மற்றும் திலீப்குமார் ஆகிய இரண்டு இளைஞர்கள் போதை மாத்திரை வாங்கி பயன்படுத்தியதாக அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் - தினேஷ்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Crime News, Drug addiction, Erode, Online purchase, Tablets

    அடுத்த செய்தி