Home /News /erode /

16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஈரோடு சினை முட்டை விவகாரத்தில் 16 வயது சிறுமியின் தாய் உட்பட 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்றதாக எழுந்த புகார் நாட்டையே உலுக்கியது. சிறுமியிடம் இருந்து சினை முட்டைகளை பெற்று அவரது தாய் சுமையா, தருமபுரி, ஒசூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஈரோடு சூரம்பட்டி காவல் துறையினர் சிறுமியின் தாயார் சுமையா என்கின்ற இந்திராணி, சிறுமியின் வளர்ப்பு தந்தை சையத்அலி ,  இடைத்தரகர்களாக செயல்பட்ட மாலதி மற்றும் ஆதார் கார்டை திருத்தி கொடுத்த ஜான் உள்ளிட்ட நான்கு பேரை போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் கைது செய்தனர்.

    இதனிடையே தமிழக அரசு   சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையிலான குழு விசாரணைக்கு உத்தரவிட்டது. குழுவினரும் சிறுமி மற்றும் கருமுட்டை பெற்றதாக புகார் எழுந்த  மருத்துவமனைகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணை அடிப்படையில் மருத்துவமனைக்கு சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனிடையே கருமுட்டை விவரத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும்  குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பரிந்துரையின் அடிப்படையில்  மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண்ணுண்ணி உத்தரவிட்டார்.

    Must Read : சர்வாதிகார அறிவுரைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளாசல்

    இதனைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையிலுள்ள 4 பேரிடமும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான கடிதத்தை வழங்கினர்.

    செய்தியாளர் - மா.பாபு.
    Published by:Suresh V
    First published:

    Tags: Arrested, Crime News, Erode

    அடுத்த செய்தி