ஈரோடு கிழக்கு கணபதி நகர் பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரச்சார வாகனத்தில் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், வாக்குசாவடியில் முதல் பெட்டியில் இரண்டாவதாக கை சின்னம் இருக்கும் என்றும், இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கனும் எனவும் தெரிவித்தார்.
திருமகன் ஈவேரா 9 ,000 வாக்கு வித்தியாசத்தில ஜெயிக்க வைத்தீர்கள், ஈவிகேஎஸ் இளங்கோவனை இன்னும் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தால் மாதம் ஒரு முறை இங்கே வந்து தங்குகின்றேன் எனவும் தெரிவித்தார்.மேலும் 50 ஆயிரம் வாக்கு வி்த்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், அதிமுக வேட்பாளரை மக்கள் விரட்டி அடிக்கின்றதை தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள் என தெரிவித்தார்.
முந்தைய ஆட்சியாளர்கள் அரசின் கஜானா 5 லட்சம் கோடி கடனில் வைத்திருத்தார்கள். ஆட்சிக்கு வந்த பின்கொரனா நிவாரண தொகை , பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து, மக்களை தேடி மருத்துவம், காலை சிற்றுண்டி திட்டம் இப்படி பல திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம்
பெண்களுக்கான உரிமை தொகை 1000 ரூபாய்க்கு நான் உறுதிமொழி கொடுக்கின்றேன். பெண்களுக்கான 1000 ரூபாய் உரிமை தொகை திட்டம் 5 அல்லது 6 மாதங்களில் கொடுக்கப்படும் என தெரிவித்தார். நம்பர் 1 முதல்வராக ஸ்டாலின் இருக்கின்றார், விரைவில் நம்பர் 1 மாநிலமாக வருவோம் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Erode, Erode Bypoll, Erode East Constituency, Local News, Udhayanidhi Stalin