புவன் நல்லன் இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் `ஜாம்பி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் `ஜாம்பி'. யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து உள்ள நிலையில் யோகி பாபுவுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை யாஷிகா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் யோகி பாபுவுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக உள்ளதாகவும், படத்தில் அவருடைய அர்ப்பணிப்புக்கும், நகைச்சுவைக்கும் தான் ரசிகை ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
`ஜாம்பி' படத்தின் கதை ஒரு நாள், ஓர் இரவில் நடப்பது போல் உருவாகி வருகிறது. படத்தை கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். பிரேம்ஜி இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.