• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கிளைமாக்ஸை நெருங்கும் பிரபல சீரியல் - முடிவுக்கு வருகிறதா? ரசிகர்கள் சோகம்!

கிளைமாக்ஸை நெருங்கும் பிரபல சீரியல் - முடிவுக்கு வருகிறதா? ரசிகர்கள் சோகம்!

யாரடி நீ மோகினி' சீரியல்

யாரடி நீ மோகினி' சீரியல்

மானுஷ்ய கதாபாத்திரத்தை சீரியலுக்குள் கொண்டு வந்து, அதனை மக்கள் விரும்பும் வகையில் கதைக்களத்தை அமைத்ததால் இந்த தொடர் பெரும் வெற்றி பெற்றது.

  • Share this:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றித் தொடராக இருக்கும் "யாரடி நீ மோகினி' சீரியல் விரைவில் கிளைமாக்ஸ் காட்சிகளை நெருங்க உள்ளதாக நாடகக்குழு தெரிவித்துள்ளது. சன் டிவி, விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் போட்டிப்போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அதில், மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற சீரியல்கள் பல உள்ளன.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி தொடரும் மக்களின் வரவேற்பை பெற்ற தொடராக இருந்து வருகிறது. அண்மையில் 1200வது எபிசோடை கடந்த இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

ALSO READ |  அட்லியும், அவர் மனைவியும் அதிகம் நேசிக்கும் நபர் யார் தெரியுமா?

இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமானுஷ்ய கதாபாத்திரத்தை சீரியலுக்குள் கொண்டு வந்து, அதனை மக்கள் விரும்பும் வகையில் கதைக்களத்தை அமைத்ததால் இந்த தொடர் பெரும் வெற்றி பெற்றது.

சீரியல் தொடங்கியபோது முதன்மை கதாப்பாத்திரத்தில், சின்னத்திரையில் பிரபலமான நடிகரான சஞ்சீவ் நடித்தார். அவருடைய விலகலுக்குப் பிறகு ஸ்ரீகுமார் லீட் ரோலில் நடிக்கிறார். அவருடன் இணைந்து பாத்திமா பாபு, சைத்திரா, நக்சத்திரா, சுர்ஜித், தீபா, அரவிந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ALSO READ |  புகழ் பெற்ற ‘சூப்பர்மேன்’ பட இயக்குநர் ரிச்சர்ட் டோனர் மறைவு

காதல், குடும்பம் என மற்ற தொடர்களில் இருப்பதுபோன்ற கதையம்சமாக இருந்தாலும், இதில் கூடுதலாக ஆவி என்ற அமானுஷ்ய கதாப்பாத்திரத்தை நிறுவி ரசிகர்களை கவர்ந்துள்ளனர். கதைப்படி பணக்கார வீட்டுப் பையனான முத்தரசனுக்கு, சித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடக்கிறது.

அவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுவதால், முத்தரசனுக்கு அடுத்த கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. முத்தரசனின் சித்தி அவருடைய அண்ணன் மகளை கட்டிவைத்து சொத்தை அபகரிக்க திட்டமிடுகிறாள்.

ஆனால், முத்தரசனை சிறு வயது முதல் காதலிக்கும் வெண்ணிலாவை கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என ஆவியாக வரும் சித்ரா நினைக்கிறாள். இதற்கு இடையே நடைபெறும் சூழ்ச்சிகள், காதல், அன்பு என கதைக்களம் விறுவிறுப்பாக நகர்கிறது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் பெற்றுள்ள இந்த தொடர் குறித்து புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், யாரடி நீ மோகினி தொடர் விரைவில் கிளைமாக்ஸை நெருங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ALSO READ |  அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ், நித்யா மேனன்!

நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகும் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் எப்படி இருக்கப் போகிறது? என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழத் தொடங்கியுள்ளது. அதேநேரத்தில் கிளைமாக்ஸ் நெருங்க உள்ளதால் யாரடி நீ மோகினி விரைவில் முடியபோகிறதோ? என கவலையும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

இனிவரும் எபிசோடுகளில் டிவிஸ்டுகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் பஞ்சமிருக்காது. முக்கிய கதாப்பாத்திரமான வெண்ணிலாவாக நக்சத்திரா, கவுதமாக சுர்ஜித் அன்சாரி நடிக்கின்றனர். தற்போது சின்னதிரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக எபிசோடுகளைக் கொண்ட தொடராகவும் யாரடி நீ மோகினி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: