முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அடுத்த திருப்பம்.. யமுனா விஷயத்தில் ரங்கநாயகி கொடுத்த தீர்ப்பு - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

அடுத்த திருப்பம்.. யமுனா விஷயத்தில் ரங்கநாயகி கொடுத்த தீர்ப்பு - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

யமுனா விஷயத்தில் ரங்கநாயகி கொடுத்த தீர்ப்பு, கோகிலா முடிவு என்ன என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் வெற்றி பஞ்சாயத்தை கூட்டிய நிலையில் இன்றைய எபிசோடில் யமுனாவுக்கும் கார்த்திக்கும் கல்யாணம் செய்ய தனக்கு விருப்பம் இல்லை என்று கோகிலா கூற அதற்கு சக்தி , கல்யாணம் செய்து கொள்ள இருக்கும் கார்த்திக்கை கேளுங்கள் என்று சொல்கிறாள்.

பிறகு ரங்கநாயகி கார்த்திக்கிடம் யமுனாவை கல்யாணம் செய்ய விருப்பமா விருப்பம் இல்லையா என்று கேட்க, கார்த்திக் யமுனாவை கல்யாணம் செய்து கொள்வதாக பஞ்சாயத்தில் கூறி விட, அதிர்ச்சி அடைந்த கோகிலா பஞ்சாயத்து முடிவுக்கு கட்டுப்பட முடியாது என்று கூறி விடுகிறாள்.

இதனால் இந்த ஊரில் இருந்தால் பஞ்சாயத்து முடிவுக்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும் என்று ரங்கநாயகி சொல்ல வேறு என்ன செய்வது என்று யோசித்து, இன்னும் பத்து நாட்களுக்குள் 10 லட்சம் பணம் கொடுத்தால் தன் மகனுக்கு கல்யாணம் செய்ய சம்மதிக்கிறேன் என்று கூறி விடுகிறாள் கோகிலா. மேலும் இதுதான் முடிவு என்று தீர்ப்பு சொல்லி விடுகிறாள் ரங்கநாயகி.

அடுத்து பஞ்சாயத்து முடிந்த கோகிலா கார்த்திக்கிடம் யமுனாவையும் வீட்டிற்கு அழைத்து வர சொல்கிறாள். ஏன் என்று கனகலிங்கம் கேட்க யமுனா நம் கண் பார்வையில் இருப்பது தான் நல்லது இல்லை என்றால் சக்தி யமுனாவை கார்த்திக்கிற்கு திருட்டு கல்யாணம் செய்து வைத்து விடுவாள் என்று கூறுகிறாள்.

பிறகு ரங்கநாயகி வெற்றியிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்க, வெற்றி வாங்க மறுக்கிறான். பூஜா ரங்கநாயகியை மூன்றாவது மனுஷியாக தான் நினைக்கிறீர்களா என்று கேட்க, அதற்கு சக்தி நீதான் இந்த பணத்தை எடுத்த போது முதலில் தடுத்தாய். அதனால் நீ தான் ரங்கநாயகியை மூன்றாவது மனுஷியாக நினைக்கிறாய் என்று சொல்ல, பூஜா சொல்வதறியாமல் நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv