ஆப்பிரிக்காவில் சர்வைவர் நிகழ்ச்சி.. போட்டியில் பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல் இதோ..

அர்ஜுன்

அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் இதோ..

 • Share this:
  சர்வைவர் ஒரு சாகச அடிப்படையிலான ரியாலிட்டி ஷோ. அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சமீபத்திய தகவல்களின்படி,16 போட்டியாளர்கள் 90 நாட்களுக்கு மேல் குறைந்த ஆதாரங்களைக் கொண்ட ஒரு தீவில் தனியாக விடப்படுவார்கள்.

  போட்டியாளர்கள் ஆடம்பர புள்ளிகளை வெல்லவும், நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறவும், எலிமினேஷனில் இருந்து தப்பிக்கவும் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும். அர்ஜுனும், போட்டியாளர்களுடன் தங்கியிருந்து அவர்களுக்கு வழிகாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகிவுள்ளது. அதில் இந்த நிகழ்ச்சி ஆப்பிரிக்காவில் இருக்கும் காட்டில் நடைபெறவுள்ளது என்று உறுதியாகிவுள்ளது.

  அந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் இதோ..

  1. விக்ராந்த்  2.பெசன்ட் ரவி  3.காயத்ரி ரெட்டி  4.   உமாபதி   5.சிருஷ்டி டங்கே  6.விஜயலக்ஷ்மி  7.வி ஜே பார்வதி  8.நந்தா  பிரம்மிப்பூட்டும் வகையில் வெளியாகிவுள்ள சர்வைவர் நிகழ்ச்சியின் ப்ரோமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செப்டம்பர் 12 முதல் இரவு 9.30 மணிக்கு தினமும்  ஒளிப்பரப்பாகவுள்ளது.

  8 போட்டியாளர்களின் பட்டியல் வெளியான நிலையில், அடுத்து இன்னும் எத்தனை போட்டியாளர்கள் உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: