ஃபோனை எடுங்க மிஸ்டு கால் கொடுங்க - யாரடி நீ மோகினி சீரியலின் கிளைமாக்ஸ் உங்கள் கையில்!

யாரடி நீ மோகினி

பேய் கேரக்டரை வைத்து ஒரு அழகான குடும்ப கதையை நேர்த்தியாக நாகார்த்தியதே இந்த சீரியல் வெற்றி அடைய முழு முதற்காரணம்.

  • Share this:
ஏராளமான சீரியல்களை ஒளிபரப்புவதன் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களை டிவி முன் கட்டி போட்டு வைத்துள்ளன பல்வேறு முன்னணி பிரபல தமிழ் சேனல்கள். இதுவரை தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி உள்ள மற்றும் ஒளிபரப்பில் உள்ள எண்ணற்ற சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் தங்கள் ஒளிபரப்பும் ஒவ்வொரு சீரியலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அனைத்து டிவி சேனல்களும் நாள்தோறும் காலை துவங்கி இரவு நாம் உறங்க செல்லும் வரை ஏராளமான சீரியல்களை போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்பி வருகின்றன.

சன், விஜய், கலர்ஸ் தமிழ் என பல்வேறு முன்னணி சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்பை தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தி கொண்டு வரும் நேரத்தில் ஜீ தமிழ் சேனலும் ஒருபக்கம் சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள், நிகழ்ச்சிகள் மற்றும் வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்பி இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை பல்வேறு தரப்பினரை தன்பால் ஈர்த்துள்ளது. அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு சீரியல் தான்ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "யாரடி நீ மோகினி". ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்களிடையே ஏகோபித்த ஆதரவு பெற்றிருந்தாலும் இதில் யாரடி நீ மோகினி சீரியல் தான் சூப்பர் ஹிட் சீரியலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேய் கேரக்டரை வைத்து ஒரு அழகான குடும்ப கதையை நேர்த்தியாக நாகார்த்தியதே இந்த சீரியல் வெற்றி அடைய முழு முதற்காரணம். 2017-ம் ஆண்டு முதல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் வெற்றி பெற முக்கிய அம்சமாக இருப்பது குடும்ப சீரியலாக இருந்தாலும் அமானுஷ்ய விஷயங்கள் மற்றும் கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஏற்று கொள்ளும் வகையில் சிறப்பாக காட்டியது தான். விறுவிறுப்பான மற்றும் சுவாரசியமான கதைக்களத்தில் ஆவி மற்றும் அமானுஷ்யம் போன்ற மசாலாக்களை சரியான விகிதத்தில் கலந்ததால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சீரியல்களின் பட்டியலில் இணைந்தது "யாரடி நீ மோகினி" சமீபத்தில் 1200 எபிசோட்களை வெற்றிகரமாக கடந்த இந்த ஹிட் சீரியல் விரைவில் நிறைவடைய இருக்கிறது.

எதிலும் தனித்து வித்தியாசமாக சிந்திக்கும் ஜீ தமிழ், சின்னத்திரை ரசிகர்களின் மனங்கவர்ந்த யாரடி நீ மோகினி சீரியலுக்காக இதுவரை எந்த ஒரு தமிழ் சேனலும் சீரியலுக்காக செய்யாத அதிரடி முடிவை எடுத்துள்ளது. ரசிகர்களை இது நாள் வரை ரசிக்க வைத்த யாரடி நீ மோகினி சீரியலின் கிளைமாக்ஸை, இதுநாள் வரை பார்த்து இந்த சீரியலை ஹிட் லிஸ்ட்டில் சேர்த்த ரசிகர்களின் கைகளில் கொடுத்துள்ளது தயாரிப்பு குழு. இது தொடர்பான தகவல் அடங்கிய ப்ரமோ வீடியோவில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also read... ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அந்த வீடியோவில் நடிகர் ஸ்ரீகுமார் பேசியுள்ளார். அதன்படி வீடியோவில் விரைவில் யாரடி நீ மோகினி கிளைமாக்ஸை நெருங்க உள்ளதாகவும், கிளைமாக்ஸை முடிவு செய்யும் வாய்ப்பு நேயர்களுக்கு வழங்கப்படுவதாகவும் கூறி உள்ளார். மொத்தம் 3 கிளைமாக்ஸ்களை தயாரிப்பு குழு ஆப்ஷனாக கொடுத்துள்ளதாகவும், இந்த மூன்றில் ரசிகர்கள் பெருவாரியாக ஓட்டளித்து தேர்வு செய்யும் கிளைமாக்ஸே யாரடி நீ மோகினி சீரியலின் கிளைமாக்ஸாக ஷூட் செய்யப்பட்டு டெலிகாஸ்ட் செய்யப்படும் என்றும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.அதே வீடியோவில் தொடர்ந்து பேசும் சீரியலில் ஸ்வேதா என்ற வில்லி கேரக்டரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி, ஆப்ஷன் A) முத்தரசு மாமா மற்றும் வெண்ணிலா இருவரும் என்னை மன்னித்து வாழ வைக்கனுமா.? ஆப்ஷன் B) வெண்ணிலா என்னை பழி வாங்கனுமா.? ஆப்ஷன் C) சித்ரா ஆவி என்னை பழி வாங்கனுமா.? என்ற 3 ஆப்ஷன்கள் இருப்பதாக நேயர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த 3 விருப்பங்களில் ஆப்ஷன் A-வை தேர்வு செய்யும் ரசிகர்கள் 8657865760 என்ற நம்பருக்கும், ஆப்ஷன் B-ஐ தேர்வு செய்யும் ரசிகர்கள் 8657865761 என்ற நம்பருக்கும், ஆப்ஷன் C-ஐ தேர்வு செய்யும் ரசிகர்கள் 8657865762 என்ற நம்பருக்கும் மிஸ்டு கால் தந்து தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: