போலி அக்கவுண்ட்கள்... ரசிகர்களை உஷார்படுத்திய செம்பருத்தி கார்த்திக்

போலி அக்கவுண்ட்கள்... ரசிகர்களை உஷார்படுத்திய செம்பருத்தி கார்த்திக்

நடிகர் கார்த்தி

இன்ஸ்டாகிராமைத் தவிர தனக்கு மற்ற சோஷியல் மீடியாக்களில் தனக்கு அக்கவுண்ட் இல்லை எனக் கூறி ரசிகர்களை உஷார்படுத்தியுள்ளார் சீரியல் நடிகர் கார்த்திக்.

  • Share this:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர்  ‘செம்பருத்தி’. இத்தொடருக்கு ரசிகர்கள் ஏராளம். நடிகை ப்ரியா ராமன் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இத்தொடரில் அவரது மூத்த மகன் ஆதி என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் கார்த்திக் ராஜ். அவருக்கு ஜோடியாக ஷபானா ஷாஜகான் நடித்து வந்தார். இந்த ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கார்த்தி செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறியிருப்பதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி அறிவித்தது. அதில், “செம்பருத்தி தொடரை தனது அர்ப்பணிப்பு, கடின உழைப்பால் வெற்றியடைய வைத்த நடிகர் கார்த்திக்கு நன்றி. எதிர்பாராத சில காரணங்களால் அவருக்கு பதிலாக வேறொருவர் நடிக்க உள்ளார். அவரது பயணத்துக்கு எங்களுடைய வாழ்த்துகள். ஜீ தமிழ் உடனான அவரது தொடர்பு நீடிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.பின்னர் அவருக்குப் பதிலாக தொகுப்பாளர் அக்னி செம்பருத்தி தொடரில் இணைந்தார். இந்நிலையில் நடிகர் கார்த்திக் தனது ரசிகர்களை உஷார்படுத்தும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவொன்றை எழுதியுள்ளார். அதில் இன்ஸ்டாகிராமைத் தவிர ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட எந்த ஒரு சோசியல் மீடியாவிலும் தான் இல்லை என்றும் போலியான அக்கவுண்ட்கள் மீது புகாரளித்து தக்க நடவடிக்கையை பெறுங்கள் என்றும் தெரிவித்திருக்கும் கார்த்திக் முதிர்ச்சியுடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு கூறியுள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: