செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறிய கார்த்திக்கின் முதல் பதிவு

செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறிய கார்த்திக்கின் முதல் பதிவு

செம்பருத்தி சீரியல்

செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கப்பட்ட கார்த்திக்கின் சோஷியல் மீடியா பதிவு சின்னத்திரை ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.

  • Share this:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர்  ‘செம்பருத்தி’. இத்தொடருக்கு ரசிகர்கள் ஏராளம். நடிகை ப்ரியா ராமன் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இத்தொடரில் அவரது மூத்த மகன் ஆதி என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் கார்த்திக் ராஜ். அவருக்கு ஜோடியாக ஷபானா ஷாஜகான் நடித்து வந்தார். இந்த ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கார்த்தி செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறியிருப்பதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி அறிவித்தது. அதில், “செம்பருத்தி தொடரை தனது அர்ப்பணிப்பு, கடின உழைப்பால் வெற்றியடைய வைத்த நடிகர் கார்த்திக்கு நன்றி. எதிர்பாராத சில காரணங்களால் அவருக்கு பதிலாக வேறொருவர் நடிக்க உள்ளார். அவரது பயணத்துக்கு எங்களுடைய வாழ்த்துகள். ஜீ தமிழ் உடனான அவரது தொடர்பு நீடிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அவருக்குப் பதிலாக தொகுப்பாளர் அக்னி செம்பருத்தி தொடரில் இணைந்தார். இருப்பினும் கார்த்திக் கேரக்டரில் அவர் பொருத்தமாக இல்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன. சீரியலில் இருந்து வெளியேறிய பின்னர் சோஷியல் மீடியா பக்கம் தலைகாட்டாமல் இருந்த கார்த்திக் நேற்று ‘கிங்’ என்று எழுதப்பட்ட டி-சர்ட் அணிந்து புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கார்த்திக்கின் இந்த பதிவு செம்பருத்தி தொடர் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. பலரும் கார்த்திக் திரும்ப சின்னத்திரைக்கு திரும்புகிறார் என்று கமெண்ட் பதிவிட்டுள்ளனர். நடிகர் கார்த்திக் தனது பதிவில் ஒரு சூரியன், ஒரு நிலவு, ஒரு உண்மை என்று குறிப்பிட்டிருக்கிறார்.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: