’புது புது அர்த்தங்கள்’ சீரியலின் 100வது எபிசோட் - கேக் வெட்டி கொண்டாடிய ’டீம்’!

புது புது அர்த்தங்கள் சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘புது புது அர்த்தங்கள்’சீரியல் 100 வது எபிசோடை எட்டியுள்ளதை நாடகக் குழுவினர் அனைவரும் ஒன்றாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

  • Share this:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி முதல் புத்தம் புதிய சீரியலான ‘புது புது அர்த்தங்கள்’ ஒளிபரப்பாகி வருகிறது. மாமியார் - மருமகள் பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தொடர் 100வது எபிசோடை எட்டியுள்ளது. இதனை நாடகக் குழுவினர் ஒன்றாக இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக இருந்த தேவயாணி, இந்த சீரியலில் ‘லட்சுமி’ என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

அரசியல் பிரபலமான ‘திண்டுக்கல் லியோனி லட்சுமியின் மாமனார் திருவேங்கடமாகவும், லட்சுமியின் காதலன் மற்றும் சமையல் கலை நிபுணராக அபிஷேக் சங்கர் , லட்சுமியின் மருமகள் பவித்ராவாக வி.ஜே பார்வதி, லட்சுமியின் மகன் சந்தோஷ் கதாப்பாத்திரத்தில் நியாஸ் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கணவனை இழந்த லட்சுமி, மகன் சந்தோஷையும், மாமனார் திருவேங்கடத்தையும் ஒற்றை ஆளாக கவனித்து வருகிறார். குடும்பத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் லட்சுமி, தன்னைப் பற்றி ஒருபோதும் கவலைப்படுவதில்லை. பிறரின் மகிழ்ச்சியை மட்டுமே காணும் லட்சுமி, தனக்கான சந்தோஷம் என எதையும் அனுபவிப்பதில்லை. ஆனால், மருமகளாக வரும் பவித்ரா, லட்சுமிக்கு ஏதாவதொரு மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும் என விரும்புகிறாள்.

  
View this post on Instagram

 

A post shared by Parvathy (@parvathyofficial)


லட்சுமியின் மனதை கவரும் ஹரி கிருஷ்ணனை அவருடன் திருமண பந்தத்தில் எப்படி சேர்த்து வைக்கிறார்? என்பதை கதையின் மையக்கருவாக இருக்கிறது. மார்ச் மாதம் தொடங்கிய இந்த தொடர் விறுவிறுப்பாக செல்வதால் ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், 100வது எபிசோடை இந்த தொடர் எட்டியுள்ளதை தேவயாணி உள்ளிட்ட நாடகக் குழுவினர் ஒன்றாக இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை வி.ஜே. பவித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read : பிக்பாஸ் ஷிவானி நாராயணன் வெளியிட்ட வித்தியாசமான வீடியோ

அதில், "புதுப்புது அர்த்தங்கள் சீரியல் 100வது எபிசோடை எட்டியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. குடும்பமாக இருக்கும் எங்கள் ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து அன்பையும், ஆதரவையும் அளித்து வரும் ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து இதேபோன்ற ஆதரவை கொடுக்க வேண்டும்" என் கேட்டுக்கொண்டுள்ளார். பவித்ரா கதாப்பாத்திரத்துக்கு நீங்கள் கொடுக்கும் அன்பு வியக்க வைப்பதாகவும், அதே அன்பு தொடர்ந்து கொடுக்க வேண்டும் எனவும் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Parvathy (@parvathyofficial)


தன்னுடம் நடிக்கும் சக நடிகர்களான தேவயாணி, அபிஷேக், திண்டுக்கல் லியோனி, நியாஸ் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்துள்ள பார்வதி, தன் மீது நம்பிக்கை வைத்து நடிக்க வாய்ப்பு வழங்கிய இயக்குநர் பிரியன், மருது உள்ளிட்டோருக்கும் நன்றி கூறியுள்ளார். இதேபோல், நியாஸ் கானும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: