முடிவுக்கு வரும் ஜீ தமிழின் சூப்பர் ஹிட் சீரியல்? ரசிகர்கள் அதிரச்சி

யாரடி நீ மோகினி சீரியல்

ஏராளமான ரசிகர்களை வைத்துள்ள யாரடி நீ மோகினி சீரியல் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

  • Share this:
சீரியல்களுக்கு தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒரு சில சீரியல்கள், வரையறை இன்றி, லட்சக்கணக்கான பார்வையாளர்களை ரசிகர்களாக மாற்றியிருக்கிறது. விளைவாக, சீரியலும் சூப்பர் ஹிட்! அந்த வரிசையில் மிகப்பெரிய வெற்றியடைந்த ஒரு சீரியல், ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி. ஆனால், இந்த சீரியலின் தீவிர ரசிகர்கள் சமீபத்தில் அதிர்ச்சி அடையும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யாரடி நீ மோகினி சீரியல், திடீரென்று முடியப்போவதாக வெளிவந்த செய்தியைக் கேட்டவுடன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சீரியல் குறித்து பலரும் அறியாத விஷயங்களில் முக்கியமானது – இதன் பட்ஜெட். தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே, அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தொடர் இது தான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் யாரடி நீ மோகினி சீரியல் திடீரென்று முடிக்கப்படுவதாக வந்த செய்திகளோடு மட்டுமின்றி, கூடுதலாய் மற்றொரு அதிர்ச்சியும் வெளியாகி உள்ளது. இந்த சீரியல் நடக்கும் கதைக்களத்தின் அதே வீட்டில். மற்றொரு புதிய சீரியலின் படப்பிடிப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான படபூஜையும் போடப்பட்டுள்ளது. அதாவது, யாரடி நீ மோகினி சீரியல் முடிவுக்கு வருகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read: "ரூ.2 கோடிக்கு ரூ.7 லட்சம் மட்டுமே சேர்ந்திருக்கு"- மீண்டும் நிதியுதவி கேட்ட சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ்

மேலும், அதே வீட்டில் அடுத்த சீரியல் தொடங்கப் போவதால், புதிய சீரியல் யாரடி நீ மோகினி இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யாரடி நீ மோகினி, ஒளிபரப்பான சில நாட்களிலேயே சீரியல் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டது. அது மட்டுமின்றி, தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான இடங்களில் இருந்தது.

இந்த சீரியல் சூப்பர் ஹிட் ஆகும் அளவுக்கு, மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இதற்கு உருவாகியிருந்தனர். அடுத்தது என்ன என்று பரபரப்பில் சீரியல் கதையோட்டம் இருக்கும் நிலையில், இதில் நடித்து வரும் நடிகை, சைத்ரா ரெட்டி, ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் வகையில், இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.



அந்த புகைப்படத்தில், சீரியல் படபிடிப்பு நடக்கும் தளத்தில், அனைவரும் சிரித்தபடி எடுத்த செல்ஃபியை பகிர்ந்துள்ளார். இரண்டு படங்களிலும் அவர் கண்களை மூடியவாறு போஸ்ட் கொடுத்துள்ளார். அந்த படங்களின் கமென்ட் பகுதியில், ரசிகர்கள் மிஸ் யூ ஸ்வேதா என்று கமெண்ட்டுகள் பதிவிட்டுள்ளனர்.



யாரடி நீ மோகினி சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து, அதே வீட்டில் பூஜையோடு தொடங்கிய அடுத்த சீரியலின் பெயர் நினைத்தாலே இனிக்கும் என்றும், அந்த சீரியலில் விஜய் டிவி ஆயுத எழுத்து சீரியல் புகழ் ஆனந்த் செல்வன் நடிக்கிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த புதிய சீரியல், யாரடி நீ மோகினியின் இரண்டாம் பாகமா அல்லது புதிய கதையா என்று அதிகார பூர்வமாக கூறப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: