பிரபல சீரியல் நடிகைக்கு நடந்த திருமண நிச்சயதார்த்தம் - ரசிகர்கள் வாழ்த்து

சீரியல் நடிகை வைஷ்ணவி ஜெய் திருமண நிச்சயதார்த்தம்

பூவே பூச்சூடவா தொடரில் நடிக்கும் நடிகை வைஷ்ணவி ஜெய்க்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

  • Share this:
கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பூவே பூச்சூடவா. இத்தொடரில் ரேஷ்மா முரளிதரன், கார்த்திக் வாசுதேவன், தினேஷ் கோபால்சாமி, மதன் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் ரேஷ்மா, மதன் பாண்டியன் இருவரும் புத்தாண்டு தினத்தில் தங்கள் காதல் திருமணத்தை உறுதி செய்துள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மதன் பாண்டியன், “இந்த ஆண்டு எங்களுக்கு ஸ்பெஷலானது. எனக்கு ஸ்பெஷலானவர் என்றென்ன்றும் என்னவளாகிறார். புத்தாண்டில் இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆம் நாங்கள் திருமண பந்தத்தில் இணைய உள்ளோம்.

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக புத்தாண்டு பிறந்த அந்த நிமிடத்தில் திருமண செய்தியை அறிவித்தோம்” என்று தெரிவித்திருந்தார். அதேபோல் இத்தொடரில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்த தனலட்சுமிக்கு கடந்த ஆண்டு தனது காதலருடன் திருமணம் நடைபெற்றது. 
View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)


இந்நிலையில் தற்போது இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த வைஷ்ணவி ஜெய்க்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியிருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: