Zee Tamil : சீரியல் ஒளிபரப்பாகும் முன்பே வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்..

ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகிவுள்ளது.

  • Share this:
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில், ஜீ தமிழ் சேனல் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சேனலுக்கென்றே பிரத்யேகமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தொலைக்காட்சி தொடர்கள் முதல் ரியாலிட்டி ஷோக்கள் வரை, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கும் ஜீ தமிழ், பல மெகா ஹிட் சீரியல்களையும் ஒளிபரப்பியுள்ளது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்காகவே, தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அது மட்டுமின்றி, இந்த சீரியல்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கென்று தனித்தனியே ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. சின்னத்திரைக்கு முதல் முறையாக ஜீ தமிழ் வழியே அறிமுகமான பல புதுமுகங்கள், இப்போது பிரபலங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ரசிகர்கள் மிகவும் வருத்தப்படும் அளவுக்கு ஒரு செய்தி வெளியானது. ஜீ தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற யாரடி நீ மோகினி நிறைவு பெற்றதை சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி பதிவு செய்திருந்தார். மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பான சீரியல், சட்டென்று முடிவுக்கு வருவதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

Also Read: பிக்பாஸ் ஷிவானி நாராயணன் வெளியிட்ட வித்தியாசமான வீடியோ

பட்டிதொட்டி எங்கும் பாராட்டு பெற்ற யாராடி நீ மோகினி முடிந்த பின், அடுத்தது என்ன என்ற கேள்விக்கு, ஜீ தமிழில் இருந்து பதில் கிடைத்துள்ளது. தற்போது, ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் ஒன்றைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சீரியலின் பெயர், ‘நினைத்தாலே இனிக்கும்’ என்றும், சீரியலுக்கான படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டதென்றும் செய்தி வெளியாகியுள்ள நிலையில், சீரியல் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி, ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.



இந்த புதிய சீரியல் பற்றி கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. இதில் நாயகனாக, விஜய் டிவி ஆயுத எழுத்து சீரியல் புகழ் ஆனந்த் செல்வன் நடிக்கிறார். இந்த சீரியலை, யாரடி நீ மோகினியை தயாரித்த மான்க் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது. சீரியலின் ப்ரோமோவும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

Photos : கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்ட பீஸ்ட் பட ஹீரோயின்..

யாரடி நீ மோகினி சீரியல் படப்படிப்பு நடந்த அதே வீட்டிலேயே, நினைத்தாலே இனிக்கும் சீரியலுக்கும் பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டதால், ரசிகர்கள் பலரும், யாரடி நீ மோகினி சீரியலின் தொடர்ச்சியாக, பாகம் 2 தான் இந்த சீரியல் என்று கூறுகின்றனர். ஆனால், இரண்டு சீரியலும் வேறு வேறு கதைக்களம் கொண்டது. நினைத்தாலே இனிக்கும் சீரியல், இரண்டாகம் பாகம் அல்ல, முழுக்க முழுக்க புதுமையான, கதை கொண்டது என்று சீரியல் வட்டாரம் கூறியுள்ளது. அதிகாரபூர்வமான ஒளிபரப்புத் தேதி மற்றும் மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் சில நாட்களில் தெரியக்கூடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: